சசிகலா மிரட்டலால் மக்கள் பீதியடைந்துள்ளனர் - முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

சசிகலாவின் மிரட்டல் பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா ஓரளவுக்குதான் பொறுமையாக இருக்கமுடியும் என கூறியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியுள்ளார். சசிகலாவின் பேச்சு வன்முறையை துண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார சண்டையில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர் வாக்களித்த மக்களுக்கு துரோசம் செய்து வருகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியுள்ளார். சசிகலாவின் பேச்சு வன்முறையை தூண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகார மோதல் அதிகரித்துள்ளது. ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி சசிகலா தரப்பு ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை.

ஒவ்வொருவராக இழக்கும் சசி

இந்நிலையில் சசிகலா தரப்பில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணிக்கு தாவி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா நேற்று போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவிக்கு பேட்டியளித்தார்.

சசிகலாவின் மிரட்டல்

அப்போது ஓரளவுக்குதான் பொறுமையாக இருக்கமுடியும் எனத் தெரிவித்தார். அதற்கு மேல் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என மிரட்டல் விடுத்தார்.

மக்களிடையே அச்சம்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கருத்து தெரிவித்துள்ளார். சசிகலாவின் பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

வன்முறைகளை தூண்டும்

ஆளும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள சசிகலா மிரட்டல் விடுத்துப் பேசியிருப்பது வன்முறைகளை தூண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அதிகாரத்தை கைப்பற்ற சட்டசபை உறுப்பினர்களை அடைத்து வைப்பது என்பது தவறான நடவடிக்கை.

மத்திய அரசு நடவடிக்கை

இரண்டு பேரும் நடத்தக் கூடிய போராட்டத்தால் மத்தியில் இருக்கக் கூடிய அரசு ஆளுநர் மூலமாக அவர்களை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல, முடிந்தவரை இதில் என்ன அரசியல் ஆதாயம் இருக்கும் என முயற்சி செய்வார்கள். யாருக்கு பலம் உள்ளது என நிருபிக்க தமிழக ஆளுநர் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்தார்.

English summary
Former CPM MLA Balabarathi Says that Sasikala speech fears people. She said saisakala is threatening people. Sasikala speech will create violence in the state Balabharati said.
Please Wait while comments are loading...