Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா டுடே தமிழ் பதிப்பு விவகாரம்... சசிகலாவின் பொது அறிவு, அப்டேட்... "மெய்சிலிர்க்கும்" மாலன்

இந்தியா டுடே தமிழ் பதிப்பு நிறுத்தப்பட்டது கூட தெரியாமல் சசிகலா பேசியிருப்பதை சாடியுள்ளார் மாலன். தம்முடைய பேஸ்புக் பக்கத்தில் சசிகலாவின் பொது அறிவை கேட்டு மெய்சிலிர்க்கிறேன் என மாலன் கிண்டலடித்துள்ள

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா டுடே தமிழ் பதிப்பு நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகளாகும் நிலையில் அந்த பத்திரிகை இன்னும் வெளிவருவதாக அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா பேட்டியளித்ததுதான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

இந்தியா டுடேவின் தென்னக மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு அதிமுகவினரின் சின்னம்மா சசிகலாவும் வரவழைக்கப்பட்டிருந்தார்.

Senior Journalist Malan slams Sasikala

வழக்கம்போல ஜெயலலிதா படத்தை பார்த்து லைட்டாக கண்ணீர் விடுவது போல கர்சீப்பால் துடைத்துக் கொண்டார் சசிகலா. அப்போது இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டு மொழியில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் திருவாய் மலர்ந்தார் சசிகலா.

இந்தியா டுடேவின் தமிழ் பதிப்பு 2 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தப்பட்டுவிட்டது. அதுகூட தெரியாமலேயே இந்தியா டுடே மாநாட்டுக்கு போய் டாம்பீகமாக பேட்டி கொடுத்த சசிகலாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் மூத்த பத்திரிகையாளர் மாலனும் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சசிகலாவின் "பொதுஅறிவு" கண்டு மெய்சிலிர்த்ததாக பதிவிட்டுள்ளார். அவர் தம்முடைய பதிவில்,

"தமிழ்நாட்டு வாசகர்களுக்காக தமிழில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அது தொடர வேண்டும் என்றும் திருமதி.நடராஜன் கூறுவதை தொலைக்காட்சியில் கேட்டேன்.

Senior Journalist Malan slams Sasikala

திருமதி.நடராஜனின் பொது அறிவைக் கண்டும், அவர் எவ்வளவு அப் டேட்டடாக இருக்கிறார் என்பதை எண்ணி மெய்சிலிர்த்தேன்

விதியே விதியே தமிழ் சாதியை என்ன செய்ய எண்ணியிருக்கிறாய்!"

என குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவில் Nana Shaam Marina என்பவர், முதல் இதழுக்கும் கடைசி இதழுக்கும் இடையில் 25 வருடம்....இந்த இரண்டு அட்டைப்படங்களை வடிவமைத்த அதிர்ஷ்டசாலியும் ... துரதிர்ஷ்டசாலியும் ... நானே...! # Hand composing cut and paste ல ஆரம்பிச்சு CTP ல முடிந்தது!" எனவும் பதிவிட்டு இந்தியா டுடே தமிழ் பதிப்பின் முதல் இதழின் முகப்பையும் கடைசி இதழின் முகப்பையும் ஸ்கேன் செய்தும் போட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+