மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி.. கையைத் தட்டி தடுத்த சந்திரலேகா!!
நெல்லை: திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியை அருகில் இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, கையைத் தட்டி தடுத்து நிறுத்தியதால் மணமகனிடம் தாலியை கொடுத்துவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி.

சுப்பிரமணியன் சுவாமி ஜனதா கட்சியை நடத்தி வந்தபோது நெல்லை மாவட்ட செயலாளராக இருந்தவர் பாலசுப்பிரமணியன். தற்போது சுப்பிரமணியன் சுவாமி நடத்தி வரும் இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.எஸ்-ல் பொதுச்செயலாளராக இருக்கிறார்.
இந்த பாலசுப்பிரமணியன்-வேணி ஆகியோரின் திருமணம் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோயிலில் இன்று காலை நடைபெற்றது.
அப்போது மணமகளின் பெற்றோர் தாலியை தொட்டு மணமகனிடம் கொடுக்குமாறு சுப்பிரமணியின் சுவாமியிடம் தந்தனர். தாலியை பெற்றுக் கொண்டு கையில் வைத்தபடி மந்திரங்களை உச்சரித்த சுப்பிரமணியன் சுவாமி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மணமகள் கழுத்தில் தாலியை கட்டுவதற்காக கொண்டு சென்றார்.
அப்போது அருகில் இருந்த சந்திரலேகா ஆடிப் போய் பதறியபடி சுப்பிரமணியன் சுவாமியின் கையை தட்டி தடுத்தார். அதன் பின்னரே சுப்பிரமணியன் சுவாமி தாலியை மணமகனிடம் கொடுத்தார். சாமி செயலால் அதிர்ந்த சந்திரலேகா அவரை கடுமையாக முறைத்துப் பார்த்தார். பின்னர் சமாளித்து சிரித்தார்.
Dr.Swamy attended wedding of Veni's son.Veni state general secretary VHS TN. pic.twitter.com/Cs9j9Qo0OH
— chandralekha V.S (@vsclekha) May 20, 2015 இதைத் தொடர்ந்து மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமகளின் கழுத்தில் திடீரென சுப்பிரமணியன் சுவாமி தாலி கட்ட முயன்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்போது இது தொடர்பான வீடியோ காட்சிதான் சமூக வலைதளங்களில் இதுதான் ஹாட் டாபிக்!
வீடியோ நன்றி: நியூஸ் 7
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications