கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. இந்த நிலையில்.. சமீபத்தில் வெளியான லோக் போல், போல் டிராக்கர் மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் ஆகிய மூன்று முக்கிய சர்வே முடிவுகள், அரசியல் களத்தில் ஒரு 'பகீர்' கிளப்பியிருக்கின்றன.
இதில் ஹைலைட் என்னவென்றால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாங்கும் வாக்கு சதவீதம் ஒருபுறம் ஆச்சரியப்படுத்தினாலும், மறுபுறம் அந்தக் கட்சிக்கு ஒரு கசப்பான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது.

திமுக: ஹாட்ரிக் கனவு... நிஜமாகிறதா?
சர்வே முடிவுகளின்படி, ஆளுங்கட்சியான திமுக அசுர பலத்துடன் வலம் வருகிறது. லோக் போல் 181-189 இடங்களையும், அக்னி நியூஸ் 180 இடங்களையும் வாரி வழங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் என அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட இடங்களிலும் உதயசூரியன் உக்கிரமாகத் தெரிவது எடப்பாடி தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது.
விஜய்யின் 'தவெக': வாக்குகள் பிளஸ்... தொகுதிகள் மைனஸ்!
விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த மூன்று சர்வேக்களும் சுட்டிக்காட்டும் ஒரு அபாய மணி - 'வாக்கு சிதறல்'.
வாக்கு சதவீதம்: லோக் போல் 23.9% மற்றும் போல் டிராக்கர் 19.2% என தவெக-விற்கு கணிசமான வாக்குகளை ஒதுக்கியுள்ளன.
நிதர்சனம்: சுமார் 20 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், அவை சீட்டுகளாக மாறாமல் 10-க்கும் குறைவான தொகுதிகளிலேயே முடிந்துவிடும் என்கின்றன புள்ளிவிவரங்கள்.
டெபாசிட் காலியாகும் அபாயம்?
அரசியல் சதுரங்கத்தில் ஒரு கட்சி 20% வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அது தொகுதிவாரியாகப் பரவலாகச் சிதறும்போது வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிடும்.
"ஒரு தொகுதியில் வெற்றி பெற அல்லது டெபாசிட்டைத் தக்கவைக்கத் தேவையான குறிப்பிட்ட வாக்கு வங்கியை (Concentrated Vote Bank) தவெக இன்னும் உருவாக்கவில்லை. பல தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் ஓட்டு வங்கியைப் பிரிக்கும் 'ஓட்டு வெட்டி' (Vote Splitter) வேலையை மட்டுமே தவெக செய்யும் சூழல் தெரிகிறது. இதனால், பல இடங்களில் விஜய்யின் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்கிறார்கள் விவரம் அறிந்த உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும்.
மூன்றாம் இடத்திற்குப் போட்டியா?
அக்னி நியூஸ் கணிப்பின்படி தவெக 9.7% வாக்குகளை மட்டுமே பெறும் என்று சொல்லப்பட்டிருப்பது, விஜய் தரப்புக்கு இன்னும் ஒரு பெரிய சவால் காத்திருப்பதை உணர்த்துகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி 5.1% வாக்குகளுடன் தன் பாதையில் உறுதியாக இருக்க, விஜய் மற்றும் எடப்பாடி இடையேதான் 'யார் எதிர்க்கட்சி?' என்ற கடும் போட்டி நிலவும் போலிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது விஜய் மொத்தமாகவே இவ்வளவுதான் வாக்குகளை வாங்குகிறார் என்றால்.. தவெக டெபாசிட் இழக்க கூட வாய்ப்புகள் உள்ளன. 100 தொகுதிக்கும் மேல் தவெக டெபாசிட் இழக்க வாய்ப்புகள் உள்ளன.
இப்போதைய நிலவரப்படி, 'ஸ்டாலின் மீண்டும் முதல்வர்' என்பது ஒரு பக்கம் இருந்தாலும், விஜய்யின் அரசியல் அறிமுகம் 'மாஸாக' இருக்குமா அல்லது 'டெபாசிட்' காலியாகும் 'மிஸ்ஸாக' இருக்குமா என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.
-
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications