Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டில் இருக்க முடியவில்லை.. மண்டபத்தில் வைத்து சோறுபோடுங்கள்.. தி நகர் மக்கள் வாய்ஸ்

சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட கோர தீ விபத்து காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அப்பகுதி மக்களை வெளியேறுமார் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், நாங்கள் எங்ககே செல்வது? என கேள்வி எழுப்பியுள்ளனர். அரசே ஒரு மண்டபத்தில் அமர வைத்து சாப்பாடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

தி நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று பற்றிய தீ இதுவரை முழுமையாக அணைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெயில் கொளுத்தி வருவதால் ஏசி, பேன் இல்லாமல் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு அருகில் உள்ள பார்க் என சென்று வருகின்றனர்.

வெளியே செல்ல எதிர்ப்பு

வெளியே செல்ல எதிர்ப்பு

இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கடையை சுற்றி வசிக்கும மக்கள் வெளியேறுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எங்கே செல்வது?

எங்கே செல்வது?

தடையை மீறி கட்டடத்தை கட்ட அனுமதி தந்துவிட்டு தற்போது தங்களை வேறு இடத்திற்கு போகச் சொன்னால் எப்படி என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் எங்கே செல்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மண்டபத்தில் தங்க வையுங்கள்!

மண்டபத்தில் தங்க வையுங்கள்!

தங்களை ஒரு மண்டபத்தில் வைத்து உணவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.எவ்வளவு நேரம் பார்க்கில் இருக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசுதான் உத்தரவளிக்க வேண்டும்

அரசுதான் உத்தரவளிக்க வேண்டும்

தங்களின் பாதுகாப்புக்கு அரசுதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சாரம் இல்லாததால் தங்களால் பணிக்கு செல்ல முடியவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+