For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுவிலக்கு: தமிழக அரசு தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும்... திருமாவளவன் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

நெல்லை: மதுவிலக்கை அமல்படுத்துவதில் உள்ள பிடிவாதத்தை தமிழக அரசு தளர்த்த வேண்டு்ம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து திருமாவளவன் பேசியதாவது:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அ்மல்படுத்தக் கோரிய சசிபெருமாள் தற்போது களப் பலியாகியுள்ளார். அவரது உயிர் தியாகத்தால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Thiruma urges TN govt to change its stance

நாளை 4ம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி முழுக் கடையடைப்பு போராட்டம் நடத்திட விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இ கமயூ, மமக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மேலும் பல கட்சிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.

ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என அறிவித்துளள திமுக எங்களது போராட்டத்துக்கு ஆதரவு நல்க வேண்டும். தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் மது விலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் மதுக்கடைகளை மெல்ல மெல்ல இழுத்து மூட வேண்டும்.

சசிபெருமாள் உறவினர்க் அவரது உடலை வாங்க மறுப்பதோடு அரசிடம் மதுவிலக்கு ஓன்றையே எதிர்பார்ப்பதாக தெரிவித்து வருகி்ன்றனர். இதற்காக உண்ணாநிலை மேற்கொணட சசிபெருமாள் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு இந்த நடைமுறையை கைவிட வேண்டும். கலிங்கப்பட்டியில் மதுகடையை மூடகோரி வைகோ தாயார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் நூற்றுக்கணக்கான போலீசார் களம் இறங்கி மதுகடையை பாதுகாப்பாக இயங்கி வருகிறது. இது கண்டனத்துக்குரியது.

மதுவிலக்கை அமல்படுத்துவதில் தமிழக அரசு பிடிவாத போக்கை கைவிட வேண்டும் என்றார் திருமாவளவன்.

English summary
VCK leader Thirumavalavan has urged the TN govt to change its stance on total prohibition issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X