ஜெ. ஆன்மா சாந்தியடைய அதிமுக கோஷ்டிகள் இணையனுமாம்.. கருணாஸ் 'டச்சிங்' டயலாக்!
அதிமுகவின் 4 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக நடந்தால் மட்டுமே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும் என்று ஈபிஎஸ் அணி எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுகவை அரும்பாடுபட்டு வளர்த்த ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிர்மறையான செயல்பாடுகளே தற்போது அரங்கேறி வருவதாக திருவாடாணை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அம்மா அணி மற்றும் அதிமுகவின் புரட்சித்தலைவி அம்மா அணி இணைய வேண்டும் என்று ஈபிஎஸ அணியைச் சேர்ந்தவர்கள் பல வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கட்சியின் எதிர்கலாம் என்ன ஆகுமோ என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும் எஞ்சியிருக்கும் 4 ஆண்டு கால ஆட்சியில் தங்களது பதவியை தக்கவைத்து கொள்ள தேவையான முயற்சிகளை ஆட்சியாளர்கள் எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாகவே ஜெயலலிதாவின் கடும்உழைப்பிற்கு பலனாக கிடைத்த ஆட்சியை தொடர்ந்து நடத்த தேவையான பணிகளில் ஈபிஎஸ் அணி இறங்கியுள்ளது. சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாடாணை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸ், அம்மா ஜெயலலிதாவின் உழைப்பால் அதிமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணிய ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிர்மறையான செயல்கள் தற்போது அரங்கேறி வருவதை, அவருடைய ஆன்மா ஏற்றுக்கொள்ளாது என்று சென்ட்டிமென்ட்டாக பேசினார் கருணாஸ். எனவே இரண்டு அணிகளும் இணைந்து கருத்து வேறுபாடுகளை மறந்து ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும், மக்கள் நலப்பணிகளையும் தொடர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஜெயலலிதாவால் கிடைத்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் பூர்த்தியானால்தான் அவரின் ஆன்மா சாந்தியடையும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருணாஸ் கூறினார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications