Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனவர் படுகொலை.. 'பொர்க்கி' சாமி போட்ட திமிர்த்தனமான ட்வீட்!

தமிழக மீனவர் படுகொலையைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ட்விட்டரில் தமிழர்களை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவ இளைஞர் பிரிட்ஜோ சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழர் விரோத கருத்துகளை தொடர்ந்து கக்கி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.

இலங்கை கடற்படை காடையர்கள் இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற 22 வயது அப்பாவி இளைஞர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி பலியாகினார்.

TN and Jaffana grous want no solution for Fishermen problem, says Swamy

ஒட்டுமொத்த தமிழகமே இச்சம்பவத்தால் கொந்தளித்து போய்கிடக்கிறது. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாத 'பொர்க்கி' புகழ் பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் திமிர்த்தனமாக கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், இலங்கையுடனான தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். ஆனால் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள குழுக்கள் தீர்வு காண்பதை விரும்பவில்லை.

தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் (இன உணர்வாளர்கள்), கட்டுமரங்களை எடுத்துக் கொண்டு இலங்கைக்கு போய் அந்நாட்டு கடற்படையுடன் சண்டை போடட்டும் என கிண்டலடித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+