Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டுமாம்... ரஜினிக்கு தகுதி இல்லை: தீபா அட்டாக்

தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும்; அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும்; அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பின் பொதுச் செயலாளர் தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பை தொடங்கியதே அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்கத்தான் என்று தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தனது மனைவிதான் முதல்வர் என்றெல்லாம் தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

 ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம்

ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம்

இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின் போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக தெரிவித்தார். இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வந்தன.

 தகுதி இல்லை

தகுதி இல்லை

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து ஜெ.தீபா சென்னையில் கருத்து தெரிவிக்கையில், அவருக்கு அரசியலுக்கு வர என்ன தகுதி உள்ளது. தமிழக பிரச்சினைகளில் இதுவரை குரல் கொடுத்துள்ளாரா.

 தமிழர்தான் ஆள வேண்டும்

தமிழர்தான் ஆள வேண்டும்

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மாநிலங்களில் முதல்வர் ஆவது சாத்தியமா என்பது எனக்கு தெரியாது. ஆனாலும் தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையே? அது தவறு போல எனக்கு தெரியவில்லை.

 காலதாமதம்

காலதாமதம்

உள்ளாட்சி தேர்தலில் என் கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவர். அந்த தேர்தலை நடத்த அரசு ஏன் இத்தனை காலம் தாழ்த்துகிறது என்பது புரியவில்லை என்றார். இதேபோல் தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று சீமானும், பாரதி ராஜாவும் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+