திருச்சி அருகே பயங்கரம்...கடனை திருப்பி கேட்டதால் அத்தையையே அடித்துக் கொன்ற அண்ணன் மகன்!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் அத்தையை அண்ணன் மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி : கடனைத் திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த அண்ணன் மகன், அத்தை மற்றும் அவரது மகனை அடித்தே கொன்றதோடு இருவர் சடலத்தின் மீது டிராக்டர் ஏற்றி சிதைத்துள்ளார்.
மண்ணச்சநல்லூரை அடுத்த வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி இவர் தனது தங்கையிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கித் தந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனது அண்ணன் கஷ்டப்படுகிறார் என்பதைல் வெளிநபரிடம் இருந்து தனபாப்பு கடன் வாங்கி ராமசாமிக்கு உதவியுள்ளார்.
ஆனால் கடனைத் திருப்பி செலுத்த முடியாத சோகத்தில் இருந்த ராமசாமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த தனபாப்பு, வெளி நபர்கள் கடனைத் திருப்பி கேட்டதால் தனது அண்ணன் ராமசாமியின் மகன் ராஜகோபாலிடம் பணத்தை கேட்டுள்ளார்.

வாய்த்தகராறு
தனபாப்பு அடிக்கடி பணத்தை கேட்டு வந்தததால் ராஜகோபாலுக்கும், அவரது அத்தையான தனபாப்புவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனபாப்பு வீட்டிற்கு வந்த ராஜகோபால் அவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து விட்டு சென்றுள்ளார்.

அடித்துக் கொலை
இந்நிலையில் நள்ளிரவில் மீண்டும் தனபாப்பு வீட்டிற்கு வந்த ராஜகோபால் தனபாப்புவையும், அவரது மகன் சத்யமூர்த்தி அடித்தே கொன்றுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தீராத ஆத்திரம்
ஆனால் அப்போதும் ஆத்திரம் தீராத ராஜகோபால் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு வந்து வீதியில் போட்டு தனது டிராக்டரை ஏற்றி உடலை நசுக்கியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் டிராக்டரை விட்டுவிட்டு ராஜகோபால் தப்பியோடியுள்ளார்.

தேடும் போலீஸ்
இதனையடுத்து உடல்களைக் கைப்பற்றிய லால்குடி போலீசார் தப்பியோடிய ராஜகோபாலை தேடி வருகின்றனர். தனபாப்புவின் மகன் சத்யமூர்த்தி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தாராம்.

கொடூரமான கொலை
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தந்தையின் மரணத்தால் ராஜகோபால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாராம். இதற்காக சில மாதங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினாராம் ராஜகோபால். இந்நிலையில் கடனைத் திருப்பிக் கேட்டதற்காக உறவினர்களையே கொடூரமான முறையில் கொன்று விட்டு தப்பியோடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications