விஜய் டிவியில இருக்கீங்களா? இல்லையா?... சொல்லுங்க டிடி சொல்லுங்க...
வாய் ஓயாத பேச்சு... அரைமணி நேர நிகழ்ச்சியில் 20 நிமிடம் தானே பேசி சிறப்பு விருந்தினரை பத்து நிமிடம் பேச வைக்கும் பெருமைக்குரிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. இதை நாங்க சொல்லலை. ஓரு காதல் கண்மணி பேட்டியின் போது பங்கேற்ற மணிரத்னம், வைரமுத்து ஆகியோரும் இதையே டிடியிடம் நேரடியாக சொன்னார்கள்.
விஜய் டிவியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடியை கடந்த மே மாதம் முதலே டிவி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை.

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை சொதப்பலாக தொகுத்து வழங்கியதால் கல்தா கொடுக்கப்பட்டு விட்டதாகவும், இல்லை இல்லை அவர் தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதைவிட முக்கியமாக டிடி கர்ப்பமாக இருப்பதால் சில காலம் ஓய்வில் இருப்பதாகவும் செய்தி வெளியானது. என்னதான் செய்கிறார் டிடி என்பதற்காக அவரை கடந்த வாரம் தொடர்பு கொண்டோம்
டிடி: ஹலோ யார் பேசறீங்க?
நாம்: டிடி எப்படி இருக்கீங்க? டிவில ஆளை பார்க்க முடியலையே?
டிடி: எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.. அதான் ரெஸ்ட்ல இருக்கேன்.
நாம்: சின்னதா பேட்டி இப்போ எடுத்துக்கலாமா?
டிடி: இப்போதைக்கு எதுவும் சொல்றதுக்கு இல்லை... நானே கூப்பிடுறேனே... பை...
இது போன வாரம்..... இந்த வாரம் டிடியின் ராஜினாமா செய்தி வெளியான பின்னர் நாம் மீண்டும் டிடியை தொடர்பு கொண்டோம்.
டிடி: நான் வெளியில இருக்கேன்... இப்போதைக்கு பேச முடியாது அப்புறம் கூப்பிடவா?
நாம்: உங்களைப் பற்றி ஒரு செய்தி வந்திருக்கே... விஜய் டிவியில இருந்து நீங்க ரிசைன் பண்ணிட்டதா? ... ( நாம் முடிக்கவேயில்லை)
டிடி: அப்படியா?... நான் அதை படிக்கவேயில்லையே.... படிச்சிட்டு சொல்றேனே... அப்புறம் கூப்பிடறேன்... பை. என்று கூறி இணைப்பை துண்டித்த டிடி இதுவரைக்கும் கூப்பிடவேயில்லை.
டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் கடைதிறப்பு, விளம்பரங்களில் டிடி நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். டிடி தற்போது வெளியூர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜினாமா செய்து விட்டதாக வெளியாகும் செய்தி வெறும் வதந்தி என்று டிடி கூறியுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.
நீங்க விஜய் டிவியில வருவீங்களா மாட்டீங்களா? சொல்லுங்க டிடி சொல்லுங்க.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications