"கூட்டணிக்கு தலைமை நாங்கதான்.. நான் எடுப்பதுதான் இறுதி முடிவு".. போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
கடலூர்: "அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பதுதான் முடிவு" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. 'ஓரணியில் தமிழ்நாடு" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னதாகவே அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இருகட்சி தொண்டர்களும் களத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டணி ஆட்சி என்பது கிடையாது, எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார்; கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது. நான் தான் தெளிவாக கூறி வருகிறேனே.. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது எங்கள் உரிமை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை. அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன்.
அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அதன் பிறகு ஆட்சியில் பங்கு குறித்து கேளுங்கள். கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பதுதான் முடிவு. பாஜக உடன் நாங்கள் கூட்டணி வைத்ததுமே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள் -
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications