வைகோவின் சமத்துவ நடைபயணம்.. திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திருச்சி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் திருச்சியியில் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை சமத்துவ நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்றது.

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணத்தை வைகோ மேற்கொள்கிறார். 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது இந்த நடைபயணத்தில் தினந்தோறும் 17 கிலோ மீட்டர் வரை வைகோ நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நடைபயணத்தை முதல்வர் திருச்சியில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடைபயணத் தொடக்க விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
டிரோன்கள் பறக்கத் தடை
முதல்வா் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications