இன்னும் சில மாதம் தான்.. அதிபர் பதவியில் இருந்து நான் நீக்கப்படுவேன்! டிரம்ப் அடுத்து சொன்ன வார்த்தை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் இன்னும் சில மாதங்களில் தான் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சமீபத்தில் தான் வெனிசுலாவை தாக்கி அந்நாட்டின் அதிபரைக் கைது செய்திருந்த நிலையில், டிரம்ப் இதுபோல கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. டிரம்ப் இதுபோல சொல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்க அதிபராகக் கடந்தாண்டு ஜனவரியில் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்று அதிகாரப்பூர்வமாக இன்னும் ஓராண்டு கூட ஆகவில்லை. இதற்கிடையே இன்னும் சில மாதங்கள் மட்டும் அதிபர் பதவியில் இருக்கும் சூழல் ஏற்படலாம் என டிரம்ப் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

டிரம்ப்
அதாவது தான் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்தாண்டு நவம்பரில் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் தனது குடியரசுக் கட்சி வெல்லாவிட்டால் நிச்சயம் தனக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வருவார்கள் என டிரம்ப் தெரிவித்தார்.
இது தொடர்பாகக் குடியரசுக் கட்சி எம்பிக்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், "மிட் டேர்ம் தேர்தல்களில் நாம் வெல்ல வேண்டும்.. இல்லையென்றால் என்னைப் பதவி நீக்கம் செய்வார்கள். எனக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வர காரணம் கண்டுபிடிப்பார்கள். நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன்" என்று அவர் தெரிவித்தார்.
மிட் டேர்ம் தேர்தல்
அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் கழித்து மிட் டேர்ம் தேர்தல் நடைபெறும். அங்குப் பிரதிநிதிகள் சபை எம்பிக்கள் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக மட்டும் உள்ள நிலையில், 435 பிரதிநிதிகள் சபை எம்பிக்களுக்கு தேர்தல் நடக்கும். செனட் சபையில் 100 இடங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சீட்களுக்கு தேர்தல் நடக்கும்.
இந்த மிட் டேர்ம் தேர்தலில் டிரம்ப் கட்சி தோற்றாலும், அவரது அதிபர் பதவிக்கு எந்தவொரு பாதிப்பும் வராது. இருப்பினும், அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் அறிவிக்கும் முக்கியமான உத்தரவுகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையை இழந்தால் அதிபர் டிரம்பால் தான் விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியாது. மேலும், டிரம்ப்பிற்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.
எதிர்ப்புகள்
அமெரிக்கப் படைகள் சமீபத்தில் தான் வெனிசுலாவை தாக்கி அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்தன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பதவி நீக்கத் தீர்மானம் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டனர். எனவே, மிட் டேர்ம் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தால் இம்மீச்மெண்ட் தீர்மானத்தை அவர் எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம்!
இது தொடர்பாக நியூயார்க்கைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி எம்பி டான் கோல்ட்மேன் கூறுகையில், "வெனிசுலா நடவடிக்கையின் போது டிரம்ப்பும் கூட மதுரோவைப் போலத் தான் நடந்து கொண்டார். சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான முறைகளை டிரம்ப் பயன்படுத்தினார். இது அமெரிக்காவின் ஜனநாயகத்தைச் சிதைத்து, அரசியலமைப்பை மீறி, சர்வாதிகாரம் நோக்கி நாட்டை இழுத்து செல்கிறது" என்றார்.
காரணம்
அதாவது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பலரும் வெனிசுலா மீதான நடவடிக்கையை எதிர்க்கவில்லை. இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமல்.. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் டிரம்ப் உத்தரவிட்டது தவறு என்றே ஜனநாயகக் கட்சியினர் டிரம்பை விமர்சித்து வருகிறார்கள். இதனால் வரும் காலங்களில் அமெரிக்க அரசியல் பரபரப்பாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications