டைட்டிலுக்கு முன் கிளம்பிய கானா வினோத்! மனைவி போஸ்ட்! பணப்பெட்டி காட்டிய பிக் பாஸின் உண்மை முகம்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9, 96வது நாளை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சி எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. டைட்டில் வின்னர் ஆவார் என்று ஒரு கட்டத்தில் பரவலாக பேசப்பட்ட கானா வினோத், ரூ.18 லட்சம் கொண்ட பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருப்பது, ரசிகர்களை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கானா வினோத்தின் முடிவு
இந்த சீசனில் தொடக்கம் முதலே தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்த கானா வினோத், டைட்டில் ரேஸில் முன்னிலையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், "டைட்டில் கிடைக்குமா, கிடைக்காதா? என தெரியாத நிலையில் ஏன் சும்மா கனவு காண வேண்டும்?" என்ற யதார்த்த சிந்தனையுடன் ரூ.18 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார்.
95 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கான சம்பளம், கூடுதலாக கிடைத்த இந்த பணம் என மொத்தமாக ஒரு பெரிய தொகை அவருக்கு கிடைத்துள்ளது. இது அவரது குடும்பத்திற்கும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் உதவும் என ரசிகர்களே பேசத் தொடங்கியுள்ளனர்.
ரசிகர்கள் கலாய்ப்பு
ஒரு பக்கம் ஆதரவாளர்கள் "காத்திருந்திருந்தால் டைட்டில் கிடைத்திருக்குமே" என புலம்ப, மற்றொரு பக்கம் சமூக வலைதளங்களில், "பிக் பாஸ் டைட்டில் யாருக்கு வரும் என்று தெரியாது, ஆனால் பணப்பெட்டி வந்தா கையில் காசு உறுதி" என்று கலாய்த்து பதிவுகள் குவிந்து வருகின்றன.
பிக் பாஸ் டைட்டில் என்பது திறமைக்கு கிடைக்கும் பரிசா, இல்ல சானல் தேவைக்கு கொடுக்கப்படும் ட்ரோஃபியா என்ற கேள்வியும் மீண்டும் எழுந்துள்ளது.
இனி டைட்டில் ரேஸில் யார்
கானா வினோத் வெளியேறியதை தொடர்ந்து, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம், திவ்யா கணேஷ், அரோரா, சாண்ட்ரா ஆகிய ஐந்து பேர்தான் தற்போது டைட்டிலுக்கான போட்டியில் உள்ளனர். பணப்பெட்டி டாஸ்க் முடிந்துவிட்டதால், இவர்கள் கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில், "இந்த சீசனில் ஒரு பெண் போட்டியாளருக்கே டைட்டில்" என்கிற தகவலும் வலுவாக பேசப்படுகிறது. அப்படி என்றால் சாண்ட்ரா அல்லது திவ்யா கணேஷ் தான் டைட்டிலை வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அரோரா விவகாரம்
அரோரா குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கடுமையாகி வருகின்றன. "சோஷியல் மீடியா பிரபலத்துக்காக பிக் பாஸில் இடம் கிடைத்ததே தவிர, டைட்டிலை வெல்லும் அளவுக்கு அவர் எதுவும் செய்யவில்லை" என பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரோராவுக்கு டைட்டில் கொடுத்தால், அது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்றும் பலர் கூறுகின்றனர்.
கானா வினோத் மனைவி ஸ்டோரி
வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வந்து, தற்போதைய போட்டியாளர்களை குறை சொல்லுவதே வேலை என ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். "கேம் விளையாட வந்தீங்களா, குறை சொல்ல வந்தீங்களா?" என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், கானா வினோத்தின் மனைவி பாக்யா வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. "வினோத் மீது நீங்கள் காட்டும் அன்பு தான் பெரிய விருது. அந்த அன்பை விட டைட்டில் பெருசா?" என அவர் கண்கலங்கியுள்ளார்.
பிக் பாஸ் 9, டைட்டிலை விட பணப்பெட்டியே நம்பகமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. கானா வினோத்தின் முடிவு, "ரியாலிட்டி ஷோவில் ரியாலிட்டி எவ்வளவு?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. டைட்டில் யாருக்கு என்ற suspense-ஐ விட, பிக் பாஸ் நிகழ்ச்சியே தற்போது ரசிகர்களின் கலாய்ப்புக்குள்ளாகி இருப்பதே இந்த சீசனின் உண்மையான ட்விஸ்ட் என்று சொல்லலாம்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications