வா தல.. பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலங்கள்! விஜய் சேதுபதி எடுத்த நல்ல முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்று நடந்த சம்பவம் தான் சோசியல் மீடியா முழுக்க பேசப்பட்டு வருகிறது. அதுவும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கம்ருதீன் மற்றும் பார்வதிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
நேற்று நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் இறுதி டாஸ்க்கில் ஒரு கார் வைக்கப்பட்டு இருந்தது. அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஒன்பது போட்டியாளர்களும் உள்ளே எவ்வளவு நேரங்கள் தாக்கு பிடிக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுக்கு பாய்ண்ட் கொடுக்கபடும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த டாஸ்க்கில் இருக்கும் போது தான் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவமும் நடைபெற்றது.

அதாவது ஆரம்பத்தில் சான்ட்ரா மற்றும் பார்வதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது இருவரும் ஒருவரை மாறி ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பார்வதி தனக்கு சப்போர்ட்டாக கம்ருதீனையும் இழுத்துக் கொண்டார். கம்ருதீன் பார்வதிக்கு சப்போட்டாக வந்து சான்ட்ராவை திட்ட தொடங்கினார்.
இவர்கள் மூவருக்குள் வாக்குவாதம் தொடங்க ஒரு கட்டத்தில் பார்வதி சான்ட்ராவை காரில் இருந்து வெளியே தள்ள முயற்சி செய்தார். ஆனால் சான்ட்ரா தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது கம்ரூதீன் பார்வதிக்கு சப்போட்டாக வந்து டோர் கதவை திறந்து சான்ட்ராவை மிதித்து வெளியே தள்ளி இருக்கிறார். அதோடு மோசமான வார்த்தைகளாலும் பேசி காயப்படுத்தி இருந்தார். இது பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.
இதனால் பல ரசிகர்களும் அதிருப்தி தெரிவித்து கம்ருதீன் மற்றும் பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று சொல்லி வந்தனர். அதோடு விஜய் டிவி பிரபலங்கள், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் பலரும் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியாகி பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் விஜய் சேதுபதி மற்றும் விஜய் டிவியை டேக் செய்து இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஜனவரி 3ஆம் தேதி ப்ரோமோ வந்திருக்கிறது. அதில் நேற்று நடந்த இந்த சம்பவத்தை பற்றி தான் விஜய் சேதுபதி பேச்சை தொடங்கி இருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற போகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications