விஜய் டிவியை திட்டினவங்களே பிக் பாஸ்க்குள்ள வைல்ட் கார்ட்! என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. ஃபைனல் நெருங்கும் நேரத்தில், வீட்டுக்குள் நடக்கும் விளையாட்டை விட, வெளியே போய் மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர்களின் கம்பேக் டிராமா தான் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது.

வைல்ட் கார்டு
இந்த சீசனில் எலிமினேட் ஆன சில போட்டியாளர்கள், வீட்டைவிட்டு வெளியே வந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும், தங்களுடைய வெளியேற்றம் அநியாயம், இந்த ஷோ முழுக்க ஸ்கிரிப்ட் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்.
ஆனால், அதே போட்டியாளர்களை தான் இப்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது விஜய் டிவி. இதைக் கண்ட ரசிகர்கள், இது டிஆர்பிக்கான திட்டமா, அல்லது எவ்வளவு திட்டினாலும் பரவாயில்லை, ஷோவுக்கு தேவையென்றால் திரும்ப கூப்பிடுவோம் என்ற மனநிலையா
என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதல் வாரத்திலேயே வெளியேறிய பிரவீன் காந்தி, பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வெளியே நடந்த விவாத நிகழ்ச்சியில் பேசியது இன்னும் ரசிகர்களுக்கு நினைவில் உள்ளது.
அதேபோல், தங்களுடைய வெளியேற்றம் அநியாயம் என்று வெளிப்படையாக பேசிய தர்பூசணி திவாகர், வியானா போன்றவர்களும் இப்போது மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதைக் கண்ட ரசிகர்கள், அப்போ அந்த கோபம் எல்லாம் வெளியே காட்டின ட்ரெய்லரா என்று சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

உள்ளே வந்து வேற லெவல் ஆட்டம்
வெளியே போன பிறகு, வீட்டுக்குள் எந்த மாதிரி விளையாட்டு நடக்கிறது, யாருக்கு ரசிகர் ஆதரவு இருக்கிறது, யார் ஹீரோ, யார் வில்லன் என்ற அனைத்தையும் புரிந்து கொண்ட பிறகே இந்த போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார்கள் என்றே பல ரசிகர்கள் பேச தொடங்கியுள்ளனர்.
அதனால் தான், உள்ளே வந்ததும் திடீர் தைரியம், அதிக பேச்சு, நான் தான் வெளியில் ஹீரோ என்ற எண்ணம் என சில போட்டியாளர்கள் தங்களுடைய கேரக்டரை காட்ட ஆரம்பித்துள்ளனர்.
திவாகரின் புதிய கதை
ஏற்கனவே தற்பெருமை பேசுவதில் பெயர் எடுத்த திவாகர், வெளியே போய் வந்த பிறகு எனக்கு வெளியில் பெரிய வரவேற்பு கிடைத்தது, ரசிகர்கள் ஆதரவு இருந்தது என்று அடிக்கடி கூறி வருகிறார்.
அதேபோல் திவாகர், பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்தது கூட தவறான விஷயம் என்றெல்லாம் குரல் கொடுத்தார். ஆனால் அடுத்த நாளே அவரை உள்ளே இறக்கி இருப்பது பற்றிய கேள்விகள் குவிந்து வருகிறது.

வியன்னா vs சான்ட்ரா
அதே நேரத்தில், வியன்னா, தன்னை மட்டும் வெளியேற்றிவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் சான்ட்ரா மற்றும் விக்கல் விக்ரம் மீது தொடர்ந்து வன்மத்தை கக்கிக்கொண்டு வருகிறார்.
ஒரு பக்கம் இது கடுப்பாக இருந்தாலும், மற்றொரு பக்கம் நாங்க நினைச்சதையே நீங்க சொல்லிட்டீங்க என்று சில ரசிகர்கள் வியன்னாவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
ஃபைனலுக்கு முன் டிஆர்பி
பிக் பாஸ் 9 இன்னும் முழுமையாக முடிவடைய ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்குள் பழைய போட்டியாளர்கள், பழைய பிரச்சனைகள்,பழைய சண்டைகள் என்று அனைத்தையும் மீண்டும் கிளப்பி, டிஆர்பியை உயர்த்த விஜய் டிவி திட்டமிட்டு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications