பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மயக்கமடைந்த கோமதி.. உண்மையை நிரூபிக்க குமார் போட்ட பிளான்! கதறி அழுத அரசி
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ஒளிபரப்பான எபிசோடு முழுக்க சிறை, வீடு, கோர்ட் என மூன்று இடங்களிலும் நடக்கும் சம்பவங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, ரசிகர்களை கடைசி வரை பதற்றத்தில் வைத்தது.
பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருக்கும் கோமதி, தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது அவருக்கு நெஞ்சடைத்து, மயக்கமடைந்து கீழே விழுகிறார். அந்த வழியாக வந்த ஒரு போலீஸ் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்.

டாக்டரின் எச்சரிக்கை
கோமதியை பரிசோதித்த டாக்டர், சுகர், பிபி எல்லாமே ரொம்ப குறைஞ்சிருக்கு. உடனே ஏதாவது சாப்பிட வச்சு, கோர்ட்டுக்கு அழைச்சிட்டு போங்க என்று கூறுகிறார். இந்தப் பக்கம் வீட்டில் மீனா, ராஜி, அரசி மூவரும் தங்களின் பெற்றோரும், சகோதரரும் சிறையில் இருப்பதை நினைத்து அழுதுகொண்டே இருக்கிறார்கள்.
அம்மா, அப்பா எல்லாம் பாவம்... எந்த தப்புமே செய்யலையே, ஏன் இப்படி தண்டனை? என்று அரசி அழுது கொண்டே இருக்கிறார். அவர்கள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்த பழனி, "நீங்க சாப்பிடாம இருந்தா, நைட்டோட நைட்டா அக்கா, மச்சான் எல்லாரையும் வெளிய விட்ருவாங்களா?"
என்று கேட்டு, "நம்ம எந்த தப்பும் பண்ணலைன்னு நமக்கு தெரியும். இதே நேரம் நம்ம எல்லாரும் வீட்டில்தான் இருப்பாங்கன்னு நம்பணும்" என்று மூவரையும் சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறார்.
சரவணனின் மனவேதனை
மறுபக்கம் சிறையில் இருக்கும் பாண்டியன் குடும்பம், மயில் செய்த துரோகங்களை நினைத்து உடைந்து போகிறது. குறிப்பாக சரவணன், "இனிமேல் மயிலுடன் சேர்ந்து வாழவே கூடாது" என்று மனதில் உறுதியான முடிவை எடுத்துக் கொள்கிறான்.
பாக்கியம் நடிப்பு
இந்த நேரத்தில் மயில் வீட்டுக்கு வந்து, புகுந்த வீட்டை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நான் என் வீட்டுக்கு போயிடுவேனா? என்று அப்பாவித்தனமாக கேட்கிறாள். அதற்கு பாக்கியம், அதுக்காகத்தான் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கோம். நீ கவலைப்படாதே என்று சொல்லி அவளை தூங்க அனுப்புகிறாள். ஆனால் இந்த காட்சியில் மயிலின் முகபாவனை ரசிகர்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
குமாரின் ஆபத்தான யோசனை
வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் சக்திவேல், முத்துவேல், வரும் குமார், "மயில் குடும்பத்தை மிரட்டி கேஸை வாபஸ் வாங்க வைப்போமா? என்று கேட்கிறான். இதற்கு சக்திவேலும் சம்மதம் தெரிவிக்க, முத்துவேல் மட்டும் "அதெல்லாம் வேண்டாம்... நாளைக்கு கோர்ட்டில் என்ன நடக்குது பார்ப்போம்" என்று தடுக்கிறார்.

மயிலின் குழப்பம்
கோர்ட்டுக்கு வர மறுக்கும் மயிலை பார்த்து பாக்கியமும், மாணிக்கமும் அவளை கடுமையாக அழுத்தம் கொடுக்கிறார்கள். அப்போது வக்கீல், "உங்களை வரதட்சணை கொடுமை பண்ணாங்கன்னு சொல்லணும்" என்று அறிவுறுத்த, மயில் என்ன செய்வது என்று குழப்பத்தில் சிக்குகிறாள்."உன்னை நம்பித்தான் இறங்கியிருக்கோம்... எங்களை ஜெயிலுக்கு போக வச்சுடாத" என்று பாக்கியம் சொல்ல மயில் குழப்பத்தில் நிற்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications