பக்தி நிகழ்ச்சியில் பதற வைத்த நடிகை சுதா சந்திரன்.. பக்கத்தில் இருந்தவர்களை கடித்து, ஆர்ப்பாட்டம்
சென்னை: பிரபல நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன், சமீபத்தில் ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலான அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இவருக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சம்பவம், ஜனவரி 3-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற 'மாதா கி சௌக்கி' என்ற ஆன்மிக நிகழ்ச்சியில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத்தினர், தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், பஜனை நடைபெற்று கொண்டிருந்தபோது சுதா சந்திரன் திடீரென தன்னை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆக்ரோஷமாக ஆடிய நடிகை
வீடியோவில், வெள்ளை மற்றும் சிவப்பு நிற புடவை அணிந்து, நெற்றியில் 'ஜெய் மாதா ஜி' என்று எழுதப்பட்ட துணியை கட்டியபடி வந்திருந்த சுதா சந்திரன், ஆரம்பத்தில் அமைதியாக அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சில நிமிடங்களில், நாற்காலியில் அமர்ந்தபடியே கத்தி, உடலை அசைத்து, ஆக்ரோஷமாக ஆடத் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
தடுக்க வந்தவரை கடிக்க முயன்ற தருணம்
அதன்பின், சுதா சந்திரன் கதறி அழத் தொடங்கினார். அதே சமயம், அவரை தடுக்க வந்த ஒருவரின் கையை கடிக்க முயன்ற காட்சிகளும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் தான் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "இது நடிப்பு இல்லை" என்பது உறுதியானதும், சமூக ஊடகங்களில் விவாதம் தீவிரமானது.
இந்த வீடியோ வைரலானதுடன், சில ரசிகர்கள், சுதா சந்திரன் நடித்த 'நாகினி' சீரியலை நினைவுகூர்ந்துள்ளனர். அந்த தொடரில், வில்லி கதாபாத்திரத்தில் அவர் காட்டிய ஆக்ரோஷம், மேக்கப், உடல் மொழி ஆகியவை மிகவும் பிரபலமானவை. அதனால், "நாகினியாக நடித்த சுதா சந்திரன், நாகினியாகவே மாறிவிட்டாரா?" என்ற வகையில் சிலர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தன்னம்பிக்கையின் அடையாளமான சுதா சந்திரன்
இந்த வீடியோ குறித்து பேசும் போது, சுதா சந்திரனின் வாழ்க்கைப் பயணம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 15 வயதில் ஏற்பட்ட விபத்தில், அவரின் கால் எலும்பு நொறுங்கிய நிலையில், அறுவை சிகிச்சை மூலம் கால் வெட்டி எடுக்கப்பட்டு, செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. அந்த நிலையிலும் மனம் தளராமல், மீண்டும் நடனம் ஆடி, மேடை ஏறி, தன்னம்பிக்கையின் அடையாளமாக மாறினார்.
மயூரி முதல் முன்னணி நடிகை வரை
பரதநாட்டியத்தை மையமாக கொண்ட 'மயூரி' படத்தில் கதாநாயகியாக நடித்த சுதா சந்திரன், அந்த படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றார். அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான அந்த படம் நல்ல வசூலை பெற்றது. அதன் பின்னர், வசந்த ராகம், சின்ன தம்பி பெரிய தம்பி, சின்ன பூவே மெல்ல பேசு போன்ற பல படங்களில் நடித்த அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பக்தியின் அதீத வெளிப்பாடா?
தற்போது வைரலாகி வரும் இந்த சம்பவம் குறித்து, "இது பக்தியின் அதீத வெளிப்பாடா?" அல்லது "ஏதேனும் உடல்நலக் காரணமா?" என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து நடிகை தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. ஒருபுறம் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்க, மறுபுறம் ரசிகர்கள்,"எப்போதும் தன்னம்பிக்கையின் சின்னமாக இருந்த சுதா சந்திரனுக்கு என்ன ஆனது? அவர் நலமாக இருக்கிறாரா?" என்ற கவலை கலந்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எந்த காரணம் என்றாலும், இந்த சம்பவம் தற்போது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications