புரட்டாசி மாத பலன்: கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.
கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் கன்னி ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். கன்னி ராசிக்காரர்களுக்கு ராசிநாதனாகிய புதன் வலுவாக உச்சம்பெற்று அமர்ந்திருக்கிறார். தன பாக்கியாதிபதியான சுக்கிரனோடு சேர்ந்து புதன் அமர்ந்துள்ளதால் இந்த மாதம் முழுவதும் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். மனதிற்குள் நிம்மதி ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் இந்த மாதம் முழுக்க உங்களைத் தேடி வருவார்கள். வீட்டில் கலகலப்பு, மகிழ்ச்சி ஏற்படும். ராசிக்குள் சூரியன் வந்து அமர்ந்திருப்பதால் இந்த மாதம் முழுவதும் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முன்கோபம் அதிகரிக்கும். ராசிக்குள் அமர்ந்திருக்கும் சூரியனை சனி பகவான் பார்ப்பதால் கோபம் அதிகரிக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 10 ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு பலவிதத்தில் பிரச்சனையைக் கொடுத்த செவ்வாய் 11 ஆம் வீட்டுக்குள் வந்து அமர்வதால் எல்லா வகையிலும் வெற்றி ஏற்படும். திடீர் பண வரவு, செல்வாக்கு ஏற்படும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். செவ்வாய் பலமாக அமர்ந்திருப்பதால் முன்பணம் கொடுத்து இடம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் போடுவீர்கள். புரட்டாசி மாதம் முடித்து ரெஜிஸ்டிரேஷன் செய்து வைப்பீர்கள். சொத்துக்கள் வந்து சேரும். செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் அமோகமாக இருக்கும். இரட்டிப்பு லாபங்கள் கிடைக்கும். உணவு, மருந்து, துணி வியாபாரம் செய்வோருக்கு இந்த மாதம் முழுவதும் அமோகமாக இருக்கும். எல்லா விதத்திலும் லாபத்தை ஏற்படுத்தக்கூடிய காலகட்டம். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால் யாரிடமும் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் சிறு சிறு விபத்துகள் வரும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. ராகு வலுத்துள்ளதால் புரட்டாசி மாதம் அற்புதமாக அதிகரிக்கும். வேடந்தாங்கல் அருகே உள்ள பிரசன்ன வெங்கடாச்சல பெருமாளை வழிபாடு செய்வது சகலவித முன்னேற்றங்களையும் தரும். நடைபாதையில் வசிப்போருக்கு உதவுவது, பாசிப்பயிறு தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.கன்னி ராசி பலன்
கோபம் வேண்டாம்
பணவரவு
இரட்டிப்பு லாபம்
வழிபாடு