தேர்தல் முடிந்த கையோடு.. மோடியின் மெகா அறிவிப்பு..! 2.55 லட்சம் கோடி திட்டம் ஒப்புதல் - ECLGS 5.0!

Subscribe to Oneindia Tamil

ஈரான் போர், ஹார்முஸ் எரிபொருள் போக்குவரத்தில் தடை ஆகியவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) 5.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.2.55 லட்சம் கோடி அளவுக்கு இந்திய நிறுவனங்களுக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான உடன் மத்திய அரசு இந்த முக்கியமான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Modi nirmala sitharaman MSME ECLGS 5 0 Scheme Modi Government MSME Support Rs 2 55 Lakh Crore Credit Boost Airline Sector Relief West Asia Crisis Aid ECLGS 5 0 MSME 2 55 ECLGS 5 0 approval Modi government ECLGS 5 0 Rs 2 55 lakh crore credit guarantee MSME emergency loan scheme airline sector financial support India ECLGS 5 0 West Asia crisis National Credit Guarantee Trustee Company zero guarantee fee ECLGS MSME 100 credit guarantee airline Rs 5000 crore package ECLGS 5 0 loan moratorium MSME working capital support India MSME liquidity relief 2026 Modi post-election announcement ECLGS scheme for aviation sector ECLGS 5 0 ECLGS 5 0 2 55 MSME MSME 100 5000 ECLGS 5 0 MSME MSME ECLGS 2026 ECLGS 5 0 MSME

மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு மூலம் உருவான நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் இந்த ECLGS 5.0 திட்டம் வாயிஸ்கா உதவி வழங்கப்படுகிறது. இது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் விமானத் துறைக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஏன் இந்தத் திட்டம் இப்போது முக்கியம்?

மேற்கு ஆசியப் பிரச்சனை காரணமாக எரிபொருள் விலை உயர்வு, சப்ளை செயின் தடை, இயக்கச் செலவு அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இது அனைத்தும் சிறு வணிகங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் விமானத் துறையை நேரடியாகப் பாதிக்கின்றன.

இந்தச் சூழலில் வணிகங்கள் தங்கள் செயல்பாட்டைத் தொடர முடியாமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு கூட தள்ளப்பட்டு இருக்கும் வேளையில் இதை தடுக்கவும், வேலைவாய்ப்புகளை காப்பாற்றவும் அரசு எளிதான கடன் வசதியை வழங்கி வணிகங்களைப் பாதுகாக்கும் நோக்கில் ECLGS 5.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

விமானத் துறைக்கு தனி உதவி

மொத்த ரூ.2.55 லட்சம் கோடி கடன் உதவியில் ரூ.5,000 கோடி விமான நிறுவனங்களுக்கு மட்டும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. விமானத் துறை எரிபொருள் விலை உயர்வு மூலம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

திட்டம் எப்படி செயல்படும்?

இந்தத் திட்டத்தில் அரசு கடன் உத்தரவாதம் அளிக்கிறது. இதனால் வங்கிகள் பயமின்றி MSME நிறுவனங்களுக்கு கடன் வழங்க முடியும். MSMEகளுக்கு 100 சதவீத உத்தரவாதம் வழங்கப்படுகிறது. விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பிற தொழில்களுக்கு 90 சதவீத உத்தரவாதம் வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .

இந்த உத்தரவாதம் அளிப்பதன் மூலம் கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும், அரசு வங்கிகளின் இழப்பை ஏற்கும். மேலும், இந்தத் திட்டத்திற்கு எந்த உத்தரவாதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இது வணிகங்களுக்கு கடன் பெறுவதை மலிவானதாகவும், வேகமானதாகவும், எளிதானதாகவும் மாற்றும்.

எவ்வளவு கடன் பெறலாம்?

MSMEகள் மற்றும் பிற வணிகங்கள் தங்களுடைய அதிகப்படியான CAPEX DleVlg ஆப்ரேட்டிங் மூலதனத்தில் 20 சதவீதம் வரை கடன் பெறலாம். அதிகபட்ச வரம்பு ஒரு நிறுவனத்திற்கு ரூ.100 கோடி. விமான நிறுவனங்கள் ஒரு கடன் பெறுபவருக்கு ரூ.1,500 கோடி வரை கடன் பெறலாம்.

கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள். முதல் ஒரு ஆண்டு அவகாசம் (மொராட்டோரியம்) வழங்கப்படும். இதனால் கடனை இக்காலக்கட்டத்தில் திகுப்பி செலுத்த தேவையில்லை, நிறுவனங்கள் முதலில் தங்களின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

யார் பயன்பெறலாம்?

மார்ச் 31, 2026 நிலவரப்படி standard account கொண்ட வணிகங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியுடையவை. கடன் ஒப்புதல் மார்ச் 31, 2027 வரை கிடைக்கும். இந்தத் திட்டத்தை National Credit Guarantee Trustee Company Limited (NCGTC) நிர்வகிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+