காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம்.. ஆளுநர் மாளிகைக்கு போன செல்வப்பெருந்தகை! செம ட்விஸ்ட்
சென்னை: அமமுக எம்எல்ஏ காமராஜிடம் குதிரை பேரம் பேசப்பட்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் தங்கள் எம்எல்ஏக்களிடமும் குதிரை பேரம் பேசப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
தவெக ஆட்சியமைக்க போராடி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை விஜய்க்கு கொடுத்திருந்தது. ஆனால் தங்கள் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இருப்பினும் ஆட்சி அமைக்க போதுமான இடங்களை பெறவில்லை. எனவே மற்ற கட்சிகளின் உதவியை நாடி வருகிறது. இந்நிலையில்தான் நேற்று ஆளுநரை சந்தித்த விஜய் கொடுத்திருந்த கடிதத்தில் அமமுக எம்எல்ஏ காமராஜின் பெயர் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், எங்கள் எம்எல்ஏ யாருக்கும் ஆதரவளிக்கவில்லை என்றும் ஆளுநரிடம் வழங்கப்பட்ட கடிதத்தில் இருக்கும் கையெழுத்து போலியானது எனவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருந்தார். தங்கள் எம்எல்ஏக்களை வளைக்க குதிரை பேரம் பேசப்பட்டிருப்பதாகவும், தவெக மீது இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குதிரை பேரம் என்பது லேசுபட்ட விஷயம் கிடையாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதை செய்தவர்களின் பதவி காலியாகிவிடும்.
இப்படி இருக்கையில் தங்கள் எம்எல்ஏக்களிடமும் குதிரை பேரம் நடத்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் இவர்களிடம் சிலர் குதிரை பேரம் பேசியிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்க காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்திருக்கின்றனர். இந்த குதிரை பேர புகார் தமிழக அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications