Low Pressure Area: வங்க கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழை விட்டு விளாச போகுது! வானிலை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை 11 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் "குறைந்த காற்றழுத்த தாழ்வு" பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு சென்னை முதல் குமரி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் அதற்கு பிறகு தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Low Pressure Area Likely Over Bay of Bengal Heavy Rain Alert Issued Across Tamil Nadu

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

சுமார் 1.5 கிமீ உயரத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல்பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.கிமீ உயரம்வரை 8, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11ஆம் தேதி வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

சுமார் 0.9 கிமீ உயரத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல்பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி முதல் மரத்வாடா வரை கடலோர கர்நாடகா, வட உள்கர்நாடகா மற்றும் மத்திய மகாராஷ்ட்ரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இன்று கனமழை பெய்யும் இடங்கள்

இன்று 10 ஆம் தேதி, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

11 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

இடி, மின்னலுடன் கனமழை வெளுக்கும்

12 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

13 ஆம் தேதி வடதமிழகத்தின் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னையில் கனமழை வெளுக்கும்

14 ஆம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் தஞ்சாவூர் மாவட்டங்கள், மற்றும் புதுவை பகுதிகளில் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிககன மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்துர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராணிபேட்டை, வேலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

15 ஆம் தேதி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மற்றும் நாமக்கல் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

09-05-2026 முதல் 13-05-2026 வரை: தமிழகம், புதுவை அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 3-4° செல்சியஸ் வரை குறையக்கூடும்.

சென்னையில் இன்று எப்படி?

சென்னையில் இன்று (10-05-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 -23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+