தேர்தல் ரிசல்ட் வந்ததிலிருந்து விஜய்க்கு தூக்கம் போச்சு! நள்ளிரவில் புயலை கிளப்பிய அரசியல் நகர்வுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் முடிவு வந்தது தான் வந்தது அன்றைய தினத்தில் இருந்து விஜய்யின் தூக்கம் போய்விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி பரபரப்புடனே கடந்து செல்கிறது. பெரும்பான்மை இல்லாமல் தவித்து வரும் விஜய் இப்போது வரை தொடர்ந்து அடுத்தடுத்து நிகழும் அரசியல் நிகழ்வுகளால் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய் தலைமையிலான த.வெ.க. 108 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் அவர் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

Sleepless Nights for Vijay Since Election Results Midnight Political Moves Intensify Tamil Nadu Drama

பதவியேற்பு விழா ரத்து

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 5 பேரை சேர்த்து த.வெ.க.வுக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், 2 முறை கவர்னரை விஜய் சந்தித்தும், அவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை. கடந்த 6 ஆம் காலையிலேயே ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கூறியிருந்த நிலையில் இரவு வரை அறிவிப்பு வெளியாகமால் இருந்தது.

மேலும் 7 ஆம் தேதி காலையில் விஜய் பதவியேற்பு விழா நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய நாள் இரவு விஜய்யின் கான்வாய் வாகனங்கள், பாதுகாப்புகள் திரும்பப் பெறப்பட்டன. மேலும் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் அப்படியே நிறுத்தப்பட்டன. இதனால் விஜய்க்கு அன்றைய தினம் தூக்கத்தை கெடுத்தது.

ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை

பின்னர் இரவு அதிமுக - திமுக கூட்டணி ஆட்சி அமைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது. இதனை திமுக பட்டும் படாமல் மறைத்தாலும் அதிமுக மறுப்பு எதுவும் தெரியவில்லை. விஜய் எதிர்ப்பு என்ற புள்ளியில் அதிமுக - திமுக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருந்த தவெகவினர் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் 108 தவெக எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துவிடுவோம் என கூறியதாக தகவல் வெளியாகின.

இதன் பிறகு நேற்றைய நாளும் விஜய்க்கு பரபரப்பாவே சென்றது என்று சொல்லலாம். ஆதரவு தருவது குறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் ஆலோசனை நடத்திவிட்டு முடிவை கூறுவதாக இருந்தன. இதனால் இவர்களின் முடிவினை எதிர்பார்த்தப்படியே தவெகவினரிம் நேரம் இன்று கழிந்தது. காலையில் இருந்து மாலை வரை திக் திக் நிமிடங்களாகவே கடந்த நிலையில், மலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை அளித்தன.

முஸ்லீம் லீக் ஆதரவு இல்லை

இதனால் விஜய் தரப்பு குஷியடைந்தனர். மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக விஜய்க்கு ஆதரவு அளித்ததாகவும் இணையத்தில் செய்திகள் பரவின. இதனால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் தீர்ந்தது. முதல்வராக நாளை பதவியேற்பார் என கூறப்பட்டது. தவெக தொண்டர்களும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் திடீரென இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விசிக விஜய்க்கு ஆதரவு கடிதம் அழிக்கவில்லை என்ற தகவல் வந்தது. இது மீண்டும் விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஆளுநர் அர்லேகரும் விஜய்யை இரவு வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதனால் நாளையாவது விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறும் என நினைத்தவர்களுக்கு மீண்டும் ஒரு ஷாக் நியூசாக பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்தது. சரி, விடிந்தால் விசிக ஆதரவு கொடுத்தால் எல்லா பிரச்சினையும் முடிந்துவிடும் என நினைத்த தவெகவினருக்கு நள்ளிரவில் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் டிடிவி தினகரன்.

நள்ளிரவில் டிடிவி கொடுத்த ஷாக்

நள்ளிரவில் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்த டிடிவி தினகரன், அமமுக எம்.எல்.ஏ காமராஜை விஜய்யின் தவெக குதிரை பேரம் நடத்தி ஆதரவு அளிக்க செய்ததாக பரபரப்பு புகாரை கூறினார். அதாவது அமமுக எம்.எல்.ஏ காமராஜ் விஜய்க்கு ஆதரவு கடிதம் அளித்ததாக தவெகவின கூறியதாகவும், இப்போது இப்படி செய்கிறார்கள், இவர்கள் தான் தூய சக்தியா என ஆவேசமாக விஜய் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். இப்படி பெரும்பான்மை இல்லாமல் தவித்து வரும் விஜய்க்கு ரிசல்ட் வந்த நாளில் இப்போது வரை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+