முடிச்சுவிட்டீங்க போங்க.. மனைவி முன்பு 'அங்கிள்' என்று அழைத்த ஜவுளிக்கடை ஓனர்.. பொளந்து கட்டிய கணவர்
போபால்: மத்தியப்பிரதேசம், போபால் அருகே தனது மனைவியின் முன்பே அங்கிள், அங்கிள் என்று அழைத்து கடுப்படித்ததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் ஜவுளிக் கடை உரிமையாளரை வெளுத்துக் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதுமே இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம். அதுவும் கணவர், மனைவியின் கண்களுக்கு காலம் முழுவதும் இளமையாக தோற்றம் அளிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கும். குழந்தைகள் அங்கிள் என்று அழைத்தாலே பல கணவன்மார்கள் கடுப்பாகிவிடுவார்கள்.

இந்நிலையில், போபாலில் மனைவியின் முன்பு 'அங்கிள்' என்று ஜவுளிக் கடையின் உரிமையாளர் அழைத்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் கடைக்காரரை பொளந்து கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் காயமடைந்த ஜவுளிக் கடை உரிமையாளர், வாடிக்கையாளர் அவரது நண்பர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், போபாலின் ஜட்கேடி பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் விஷால் சாஸ்த்ரி. இவருடைய கடைக்கு ரோஹித் என்ற வாடிக்கையாளர் தனது மனைவியுடன் புடவை வாங்குவதற்காக சனிக்கிழமை வந்துள்ளார். ஒவ்வொரு சேலைகளாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
நீண்ட நேரமாகப் பார்த்தும் சேலைகள் எதுவும் செட் ஆகாமல் இருந்துள்ளது. அப்போது, என்ன விலைக்கு நீங்கள் புடவையை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஜவுளிக் கடை உரிமையாளர் விஷால் கேட்டுள்ளார். அப்போது, ரோஹித் தான் ஆயிரம் ரூபாய்க்குள் புடவை எதிர்பார்ப்பதாகவும், அதற்கு மேல் இருந்தாலும் காட்டுங்கள் என்றும் கூறியுள்ளார்.
அப்போது அவர்களிடம் பேசிய விஷால், அங்கிள் அதிக ரேட்டிலும் புடைவையை காட்டுகிறேன் என்று கூறியுள்ளார். அங்கிள் என்று கூறியதால் கடுப்படைந்த ரோஹித் அங்கிள் என்று கூப்பிடாதீர்கள் என்று விஷாலை எச்சிரித்துள்ளார்.
ரோஹித்துக்கும், விஷாலுக்கும் இடையே இதுதொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, ரோஹித் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடையைவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து சில நபர்களுடன் ஜவுளிக் கடைக்கு வந்து விஷாலை கடையில் இருந்து சாலைக்கு இழுத்து வந்து தடி, பெல்ட்டால் அவரை தாக்கியுள்ளார்.
பின்னர், அங்கிருந்து ரோஹித் மற்றும் அவருடன் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த விஷால், ரோஹித் உள்ளிட்டோர் மீது புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, விஷால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில், ரோஹித் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications