Polls of Polls எக்சிட் போல்! ஜார்க்கண்ட்டில் யார் ஆட்சி அமையும்? பாஜக- ஜேஎம்எம் இடையே கடும் போட்டி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து Polls of Polls என்ற நிறுவனம் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் மற்றும் கடைசி கட்டமாக 38 தொகுதிகளுக்கும் இன்றைய தினமும் (நவ.20) சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இன்று நடந்த வாக்குப் பதிவில் மாலை 3 மணி வரையிலான வாக்குச் சதவீதம் 61.47 சதவீதமாகும். இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று ஒவ்வொரு ஏஜென்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் Polls of Polls என்ற நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்புகளின்படி பாஜக தலைமையிலான கூட்டணி 43 முதல் 49 இடங்கள் வரை வெல்லும்.
அது போல் ஜேஎம்எம் கூட்டணி 29 முதல் 36 இடங்களில் வெல்லும் என கணித்துள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க 41 அல்லது 42 இடங்கள் தேவைப்படுகிறது. அதை வைத்து பார்த்தால் ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவியது.
இந்தத் தேர்தலில் ஹேமந்த் சோரன் கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வென்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கூட்டணி ஆட்சி அங்கு அமைந்தது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லியில் உள்ள ஜேஎம்எம் தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனை முதல்வராக ஏற்பதற்கு ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய நண்பர் சம்பய் சோரன் முதல்வரானார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். வெறும் 5 மாதங்கள் மட்டுமே முதல்வராக இருந்த சம்பய் சோரனுக்கு அதிருப்தி நிலவியது. இந்த நிலையில் அவர் 4 ஜேஎம்எல் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் ஐக்கியமானார். ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக காரணமாக இருந்த சம்பய் சோரன் ஜார்க்கண்ட் புலி என அழைக்கப்படுகிறார். அவரே ஜேஎம்எம் மீது அதிருப்தி கூறி வெளியேறியுள்ளதால் அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் வரும் 23 ம் தேதி பொறுத்திருந்து பார்ப்போம்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications