ரகசியமாக இந்தியாவுக்கு வந்த Gold! விமானம் முழுக்க 104 டன் தங்கம்.. இனி யாரையும் நம்ப முடியாது!

Subscribe to Oneindia Tamil

உலகம் நாடுகள் அனைத்தும் நியூயார்க், லண்டன் லாக்கரில் இருக்கும் தங்கத்தை சைலெண்டாக தனது தாய் நாட்டிற்கு திரும்பி வருகிறது. நீண்ட காலமாக லண்டன், நியூயார்க் போன்ற நிதி மையங்களில் பாதுகாப்பாக இருந்த தங்கம் இப்போது பேக் செய்யப்பட்டு சொந்த நாட்டுக்கே அனுப்பப்பட்டு பூட்டி வைக்கப்படுகிறது.

இந்த மாற்றத்திற்குப் பின்னால் தங்கத்தின் விலை உயர்வது தான் என நினைப்பது தவறு, உலக நிதி அமைப்பில் 'பாதுகாப்பு' என்ற சொல்லுக்கு பொருள் மாறி வருகிறது. இதனால் முக்கிய சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டு உள்ளது.

Gold

இந்தியா இந்தப் போக்கில் மற்ற நாடுகளை விட மிக வேகமாக உள்ளது. தங்க இருப்பை பெருமளவு சொந்த நாட்டுக்குள் கொண்டு வருவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

RBI ரிப்போர்ட்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட அரையாண்டு அந்நியச் செலாவணி ரிசர்வ் மேலாண்மை அறிக்கையின்படி (அக்டோபர் 2025 முதல் மார்ச் 2026 வரை), இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880.52 மெட்ரிக் டன் ஆகும். இதில் சுமார் 77 சதவீதம் அதாவது 680 டன் தங்கம் இப்போது இந்தியாவுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருப்பது வெறும் 197.67 டன் தங்கம் மட்டுமே. இது இங்கிலாந்தின் வங்கி மற்றும் இண்டர்நேஷ்னல் செட்டில்மென்ட் வங்கியில் உள்ளது. மேலும் 2.8 டன் தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

வேகமான மாற்றம்

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 104.23 டன் தங்கத்தை RBI இந்தியாவுக்கு சிறப்பு விமானம் மூலம் ரகசியமாக கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு தங்க இருப்பை கணிசமாகக் குறைத்துள்ளது இந்தியா.

2023 மார்ச் மாதத்தில் இந்தியாவின் மொத்த தங்க இருப்பில் வெறும் 37 சதவீதம் மட்டுமே உள்நாட்டில் இருந்தது. அதன் பிறகு ஆர்பிஐ தொடர் முயற்சிகள் மூலம் தனி விமானத்தில் பெரும் பாதுக்காப்புடன் இந்தியாவுக்கு தங்கம் வந்துக்கொண்டு இருக்கிறது. இப்போது 77 சதவீதம் வரை உயர்ந்திருப்பது, இந்தியாவின் தங்க மேலாண்மை உத்தியில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

ரிஸ்கோ ரிஸ்க்

இந்தியாவின் இந்த முடிவு ஒரு சாதாரண கொள்கை மாற்றம் அல்ல. உலக நிதி அமைப்பில் பாதுகாப்பு என்றால் என்ன என்பதை முழுமையாக மறுஆய்வு செய்யும் பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாகும். பல தசாப்தங்களாக பாதுகாப்பு என்றால் நம்பகமான வெளிநாட்டு கஸ்டடியில் லண்டன், நியூயார்க் போன்ற உயர்ந்த நிதி மையங்களில் வைத்திருப்பதுதான் என்று நம்பப்பட்டது.

ஆனால் இன்று பாதுகாப்பு என்றால், சொந்த நாட்டின் உலோக வடிவில் இருப்பதுதான் என மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது. காரணம் உலக நாடுகளின் பொருளாதாரம் வேகமாக மாறி வருகிறது, இதேபோல் நாணய மதிப்பும் தலைகீழாக மாறி வருகிறது. இதனால் பாதுகாப்பான சொத்துக்களாக இருக்கும் தங்கத்தின் வாயிலாக சேமிப்பது, அதை உள்நாட்டிலேயே வைப்பதும் முக்கியமான நடவடிக்கையாக மாறியுள்ளது.

இத்தகைய நடவடிக்கையை இந்தியா மட்டும் செய்யவில்லை சீனா, ரஷ்யா என உலகில் டாலர் மதிப்பின் உயர்வால் பாதிக்கப்படும் அனைத்து நாடுகளும் தங்கத்தை பிரதான சொத்தாக பார்க்க துவங்கியுள்ளது.

இதேவேளையில் போர் அச்சமும் அதிகரித்து வரும் காரணத்தால் டிரம்ப் போன்ற அதிபர் உலக நாடுகள் மீது கண்முடித்தனமாக வரிகளையும், வர்த்தக தடைகளையும், போர் தாக்குதலையும் செய்து வருகிறது. இதற்கு பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளும் உதவும் காரணத்தால் உலக நாடுகளில் சொத்துக்கள் இருந்தால் அதை முடக்க முடியும். இத்தகைய நிலையை தவிர்க்கவும் முக்கிய சொத்துக்களை உள்நாட்டில் வைப்பது முக்கியமானதாக மாறியுள்ளது.

உலக அரசியல் அபாயங்கள்

ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் ஆப்கானிஸ்தான் ரிசர்வ் மேற்கு நாடுகளால் முடக்கப்பட்ட சம்பவங்கள் போன்றவை மத்திய வங்கிகள் லண்டன், நியூயார்க் லாக்கர் பாதுகாப்பானதாக என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

G7 நாடுகள் பிற நாடுகளின் சொத்துக்களை அணுக முடியாமல் தடை விதித்த சம்பவங்கள், தங்கத்தை வெளிநாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பானதா எனும் கேள்வியை எழுப்பியுள்ளன. தங்கம் சொந்த நாட்டில் இருந்தால், உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் உடனடியாக அதைப் பயன்படுத்த முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+