சீனாவை உள்ளே இழுக்கும் அமெரிக்கா.. டிரம்பின் பிளான் இதுதான்! வெடிக்கும் 3ம் உலகப்போர்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: நேற்று ஓமன் வளைகுடாவில், சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்றுக்கொண்டிருந்த சரக்கு கப்பலை அமெரிக்கா தாக்கியிருக்கிறது. இதன் காரணமாக, இந்த போரில் சீனாவையும் அமெரிக்கா உள்ளே இழுத்திருக்கிறது.

அதாவது, ஈரான் நாட்டின் கொடியுடன் சென்ற 'டூஸ்கா' என்ற சரக்குக் கப்பல், ஓமன் வளைகுடாவில் அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீறிச் செல்ல முயன்றது. இதை கொஞ்சமும் ரசிக்காத அமெரிக்க கடற்படை, டூஸ்கா கப்பல் மீது தாக்குதல் நடத்தி தடுத்து நிறுத்தியது.

Iran US China

அமெரிக்க கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 'டூஸ்கா' கப்பல், சீனாவிலிருந்து ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இதில் சீனத் தொடர்பு இருப்பதால், இந்த விவகாரம் இப்போது அமெரிக்கா - ஈரான் மோதலில் இருந்து மாறி, அமெரிக்கா - சீனா இடையிலான சிக்கலாக உருவெடுத்துள்ளது.

ஈரானின் வார்னிங்

பொதுவாக கடற்கொள்ளையர்கள்தான் இதுபோன்று துப்பாக்கி முனையில் சரக்கு கப்பல்களை தாக்கி, கைப்பற்றுவார்கள். இப்போது அமெரிக்கா செய்திருக்கும் வேலையும் கடற்கொள்ளை மாதிரிதான் இருக்கிறது என்று ஈரான் விமர்சித்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு மிக விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய ராணுவ செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தடுத்தால், வளைகுடா நாடுகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைப்போம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

மறுபுறும் அமெரிக்காவின் இந்த செயல், ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள 'செரீனா ஹோட்டல்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய சூழலில் ஈரானும் அமெரிக்காவும் இதில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வருவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

நடுக்கடலில் ஏற்பட்ட இந்த மோதலால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 7% உயர்ந்து, ஒரு பேரல் $96.85 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+