தூத்துக்குடி - கன்னியாகுமரி தவெகவிற்கு விழுந்த அடி.. கிறிஸ்தவர்கள் இருந்தும் பின்தங்கிய வேட்பாளர்கள்
தூத்துக்குடி: தமிழகத்தில் பல மாவட்டங்களில் தவெக அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக கிறிஸ்தவர்கள் இருக்கும் தொகுதகிளில் தவெக வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தவெகவால் பெரிய அளவில் சோபிக்க முடியாத நிலை உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை எடுத்து கொண்டால் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம்(தனி), கோவில்பட்டி என மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளின் நிலவரம் பின்வருமாறு:
* ஒட்டபிடாரம் தொகுதியில் தவெக வேட்பாளர் மதன்ராஜா 17,583 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ராமஜெயம் 11,893 வாக்குகள் வாங்கி பின்னடைவை சந்தித்துள்ளார். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 8,901 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார்.
* தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் 30,250 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக அமைச்சர் கீதா ஜீவன் 19,646 ஓட்டுகள் வாங்கி பின்தங்கி உள்ளார். அதிமுக வேட்பாளர் செல்லபாண்டியன் 9,020 வாக்குகள் வாங்கி 3ம் இடத்தில் உள்ளார்.
* ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் 33,176 வாக்குகள் வாங்கி முன்னிலையில் உள்ளார். இங்கு தவெக வேட்பாளர் சரவணன் 31,424 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் 19993 வாக்குகளுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
* திருச்செந்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ஜே முருகன் 22504 வாக்குகள் வாங்கி முன்னிலையில் உள்ளார். இங்கு திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 20,547 வாக்குகள் வாங்கி பின்தங்கி உள்ளார். பாஜக வேட்பாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் 9,584 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார்.
* விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்கண்டையன் 21,016 ஓட்டுகள் வாங்கி உள்ளார். இங்கு தவெக வேட்பாளர் காசிராம் 17,181 வாக்குகள் வாங்கி பின்தங்கி உள்ளார். அதிமுக வேட்பாளர் சத்யா 16,714 வாக்குகளுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
* கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி 15,202 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுகவின் கடம்பூர் ராஜூ 11,871வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர் 11,774 வாக்குகளுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள தொகுதிகளின் நிலவரம் பின்வருமாறு:
* கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளர் மகேஷ் 19,685 வாக்குகள் வாங்கி முன்னிலையில் உள்ளார். இவர் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை விட 2699 வாக்குகள் அதிகம் வாங்கி உள்ளார்.
* நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்தி 17,022 வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் ஆஸ்டின் 16,659 வாக்குகள் வாங்கி பின்தங்கி உள்ளார். தவகெ வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் 15,387 வாக்குகள் வாங்கி 3ம் இடத்தில் உள்ளார்.
* குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 7,270 வாக்குகள் வாங்கி முன்னிலையில் உள்ளார். தவெக வேட்பாளர் பிரேம் அலெ க்ஸ் லாரன்ஸ் 5133 வாக்குகள் வாங்கி உள்ளார். பாஜக வேட்பாளர் சிவக்குமார் 3,400 வாக்குகள் வாங்கி பின்தங்கி உள்ளார்.
* விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் 15,681 வாக்குகள் வாங்கி முன்னிலையில் உள்ளார். தவெக வேட்பாளர் மைக்கேல் குமார் 8,629 வாக்குளுடன் பின்தங்கி உள்ளார். பாஜக வேட்பாளர் விஜயதாரணி 6,326 வாக்குகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
* கிள்ளியூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சபின் 10992 வாக்குகள் வாங்கி முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 9,301 வாக்குகள் வாங்கி பின்தங்கி உள்ளார். பாஜக வேட்பாளர் நிவின் சைமன் 2,322 வாக்குகள் வாங்கி 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
* பத்மநாபபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்லசாமி 13,352 வாக்குகள் வாங்கி முன்னிலையில் உள்ளார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கிருஷ்ணகுமார் 12,027 வாக்குகள் வாங்கி பின்தங்கி உள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் 11,536 வாங்கி 3ம் இடத்தில் உள்ளார்.












Click it and Unblock the Notifications