"கெனிஷாவுக்கு ஆர்த்தி ரவியின் செக்!” சர்ச்சையை கிளப்பிய கமெண்ட், நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றி உருவான சர்ச்சை, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, பாடகியும் தெரபிஸ்டுமான கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்ட கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரவி மோகன் குடும்ப பிரச்சனை
ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது அறிந்த விஷயம். ஆனால், அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெறாத நிலையில், ரவி மோகன் கெனிஷாவுடன் பொதுவெளியில் ஜோடியாக வலம் வருவது ரசிகர்களிடையே ஏற்கனவே பேசுபொருளாக இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கருத்துக்கு கெனிஷா அளித்த பதில் தான் தற்போது முழு சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.

கெனிஷா கருத்து
அந்த பதிலில், ஆர்த்தியை பற்றி மிகவும் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. "ஒரு பெண்ணை இவ்வாறு தரக்குறைவாக பேசுவது ஏற்க முடியாது" என்று பலரும் கெனிஷாவை விமர்சித்தனர். இதே நேரத்தில், ஆர்த்திக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பலர் குரல் கொடுத்தனர்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், இந்த விவகாரம் காரணமாக ஆர்த்தி ரவி நீதிமன்றத்தில் கெனிஷா மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். அதனால் இனி கெனிஷா ஆர்த்தியை குறிவைத்து அவதூறு கருத்துகளை வெளியிடக் கூடாது என்றும், ஏற்கனவே வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், "இது தான் கெனிஷாவுக்கு ஆர்த்தி கொடுத்த செக்" என்று நெட்டிசன்கள் பேச தொடங்கியுள்ளனர்.
பிரபலம் வெளியிட்ட வீடியோ
இந்த சர்ச்சைக்கு மேலும் தீனி போடும் வகையில், சமூக வலைதளங்களில் பிரபலமான தனுஜா சிங்கம் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் தனுஜா, "என் தங்கமே கெனிஷா பிரான்சிஸ் பாடிய பாட்டை பாடி வீடியோ ஆரம்பிக்கிறேன்... ரவி இந்த ஹைபிட்ச் பியான்ஸே மாதிரி இருக்கா இல்லையானு சொல்லுங்க.. அப்புறம் ஒரு நியூஸ் காட்டுறாங்க... அதுல என்னனா, ஆர்த்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது, ஏற்கனவே போட்ட கமெண்ட்டுகளை நீக்கணும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது...

அதை பார்த்து நான் ரவி ரவி என்று அழுவேன்... அதுக்கப்புறம் என்கிட்ட வேலை செய்பவர் சொல்வார் ஒரு கான்சர்ட் பண்ணிட்டு, அதுக்கு வரும் மோசமான கமெண்ட்டுகளுக்கு அந்த அக்காவை இழுத்து கமெண்ட் போட்டா சும்மாவா இருப்பாங்க... அவங்க நம்ம மாதிரி தெருத்தெருவா பாரில் பாடுற பெண் இல்ல... பெரிய பணக்கார குடும்பம்... வச்சாங்களா ஆப்பு...
அதுக்கப்புறம் நான் சொல்வேன் - ஆர்த்தி ஒரு மெஜிஷியன்... பிளாக் மேஜிக் செய்பவர்... அவர் நல்ல பெண் இல்லைன்னு தான் கமெண்ட் போட்டேன்... நான் ரவியை சந்தோஷமா வச்சிருக்கேன்... நான் கமெண்ட்க்கு தான் பதில் போட்டேன்... நான் பார்க்க ஆர்த்தி மாதிரி இல்லைன்னு சொல்றாங்க... ஆனா நான் பியான்ஸே... மனசாட்சி இருக்கா... ஆர்த்தி ஏன் இப்படி பண்றாங்க... நான் ஒரு பெரிய பாடகி ஆகணும்னு தான் நினைக்கிறேன்..." என அந்த வீடியோவில் தனுஜா கெனிஷாவை கிண்டல் செய்து இருக்கிறார்.
அந்த வீடியோவுக்கு பெருமளவில் லைக்குகள், கமெண்ட்ஸ்கள் குவிந்துள்ளன. சிலர் இதை ஆதரிக்க, சிலர் "இது தேவையற்ற கிண்டல்" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ வைரலானதால் மீண்டும் கெனிஷா-ஆர்த்தி விவகாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.













Click it and Unblock the Notifications