மாயாஜால வித்தை.. கைக்கு அருகே வெற்றி.. திருச்செந்தூர் போங்க.. விஜயிடம் ஜோசியர் சொன்னது என்ன?
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடக்கும் சத்ரு சம்ஹார யாகத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள நடிகர் விஜய், முருகனுக்கு வேல் சாத்தி வழிபட்டுள்ளார். ஜோதிடர்கள் கொடுத்த ஆலோசனையின்படியே இந்த வழிபாடு நடந்திருக்கிறது. தேர்தல் முடிந்த நாளில் இருந்து தினமும், தவெகவின் முக்கிய நிர்வாகிகள், அரசியலை கடந்து நட்பு ரீதியாக தம்முடன் நெருக்கமாக இருக்கும் மாற்றுக்கட்சிகளில் இருக்கும் சில முக்கிய நண்பர்கள் ஆகியோருடன் விவாதித்தபடி தான் இருக்கிறார் விஜய்.
இந்த ஆலோசனைகளில், ஒற்றை நாடியாக இருப்பது தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்கும்? என்பதுதான். இந்த கேள்விக்கு அவரிடம் பாசிட்டிவ் பதில்களே சொல்லப்பட்டுள்ளன. 140 சீட்டுகளுக்கு குறைவில்லாமல் தவெக ஆட்சியைப் பிடிக்கும் என விஜய்க்கு சொல்லப்படுவதால், தற்போது விஜய்க்கும் அந்த நம்பிக்கை அபரிமிதமாக வளர்ந்து நிற்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னதுபோல, கவுண்டிங் சென்டரில் திராவிட கட்சிகள் குறிப்பாக திமுக என்ன மாயாஜாலம் செய்யும் என்பதை ஜான் ஆரோக்கியசாமியும் ஆதவ் அர்ஜுனாவும் விஜய்யிடம் வலியுறுத்தியிருப்பதால் கவுண்டிங் சென்டரில் கவனம் தேவை என்பதை தவெகவின் மாவட்ட செயலாளர்களிடம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் விஜய்.
மா.செ.க்களிடம் பேசும் விஜய், வெற்றி நமது கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. நல்ல தீர்ப்பை மக்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். அதை நாம் சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும். ஆனால், அதை செய்ய விடாமல் பல்வேறு சூழ்ச்சிகளை திமுக செய்யும். அவர்களின் மாயாஜால வித்தைகளை என்னை விட நீங்கள் நன்றாக அறிந்துவைத்திருப்பீர்கள். அதனால், திமுகவை எதிர்த்து இதுவரை நாம் போராடியதெல்லாம் போராட்டம் அல்ல! வாக்கு எண்ணும் மையத்தில் நமது வெற்றியை பறிக்க திமுக முயற்சிக்கும். அதை எதிர்த்து நாம் போராடுவதுதான் உண்மையான போராட்டம்.
அதனால், ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். கவுண்டிங் சென்டரில் கவனமாக இருங்கள். ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு ப்பதிவு மெஷினில் தவெகவுக்கு விழும் ஓட்டுகளை கவனமாக குறித்துக்கொள்ளுங்கள். அதே ரிசல்ட்டைத்தான் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கவுண்டிங் சென்டரிலுள்ள தேர்தல் அதிகாரிகள் அனுப்பி வைக்கிறார்களா? என்பதையும் கண்காணியுங்கள். மேலும், எலெக்சன் ரூல்ஸ்படி என்னென்ன செய்யனுமோ அதை முன்கூட்டியே செய்து வைத்துவிடுங்கள். கடைசி நேரத்தில் தடுமாறாதீர்கள் என்றெல்லாம் நிறைய அட்வைஸ் செய்தபடி இருக்கிறார் விஜய்.
கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான், தேர்தல் மேலாண்மை பிரிவு செயலர் ஆதவ், பொதுச்செயலாளர் புஷ்சி, விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட சிலருடன் நேற்று முன்தினம் பேசிக்கொண்டிருந்த விஜய், உங்களிடமிருந்து மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கு வரும் தகவல்களும் நமக்கு பாசிட்டிவ்வாகத்தான் இருக்கிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 10 தொகுதிகள் நமக்கு சாதகமாக இருக்கிறது என சொல்கிறார்கள். எந்தளவுக்கு இது பாசிபிள் என எனக்குத் தெரியவில்லை என்று ஒருவித மகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார்.
அதற்கு ஜான் மற்றும் ஆதவ் இருவரும், இந்த தேர்தலில் வீசியிருப்பது விஜய்யிசம். தமிழக மக்கள் ஒரு முடிவு எடுத்தால் அது ஒரே மாதிரி இருக்கும். சென்னையில் உள்ள ஒருவர் நினைக்கும் அதே விசயத்தை கன்னியாகுமரியில் இருக்கும் கடைகோடி சாமானியனும் நினைப்பான். அதனால்தான், தமிழகத்தில் எப்போதும் ஒரே மாதிரி அலை வீசும். இந்த தேர்தலில் வீசியிருப்பது விஜய் அலை. இதனை விஜய்யிசம் என்றுதான் எல்லோரும் சொல்லி வருகிறார்கள்.
ஆட்சி நம் வசம் வந்துவிடும். தவெக ஆட்சி அமைந்து விட்டால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தவெகதான். 1967-ல் காங்கிரசிடமிருந்து திமுக ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்தன. திமுகவிடம் இழந்த ஆட்சி அதிகாரத்தை இப்போது வரை காங்கிரசால் மீட்க முடியவில்லை. அதேபோல தவெகவிடம் ஆட்சியை இழக்கும் திமுக, இனி எப்போதும் மீட்க முடியாது என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த சூழலில்தான், ஜோதிடரிடம் ஆலோசித்தார் விஜய். அப்போது, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வெற்றி இருக்கிறது. அதை முழுமையாக உங்கள் வசமாக்க திருச்செந்தூர் முருகனுக்கு வழிபாடு நடத்திவிட்டு வாருங்கள் என சொன்ன யோசனையின் படியே வழிபாடு நடத்தியிருக்கிறார் விஜய்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications