அதிகாலையில் கோர விபத்து.. ஆம்னி கார் மோதி 4 பேர் பலி.. திருமணம் முடித்து சென்னை திரும்பியபோது சோகம்!

  • திருச்சி: திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து தொடர்பான போட்டோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால் தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் சுப நிகழ்ச்சிகள் நடந்தன. அப்படி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய தம்பதிக்கு தான் மோசமான ஒரு விபத்து நடந்துள்ளது.

    Advertisement

    திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து தொடர்பான போட்டோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதுகுளத்தூரில் சகோதரரின் திருமணத்தை முடித்துவிட்டு காரில் சென்னை திரும்பியபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஆம்னி பேருந்தின் பின்னால் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் காரில் பயணம் செய்த காளீஸ்வரன், பிரபாகரன், கார்த்தி மற்றும் அவரது மனைவி சூர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜசீலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய குடும்பத்தினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Four people were killed after a car returning to Chennai from a wedding in Mudukulathur collided with the rear of an omni(திருச்சி சென்னை ஆம்னி விபத்து): Trichy Chennai Highway Accident latest news in tamil.