For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாலர் கனவுகள்...

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

அடுத்த வாரம் அசோக் ஸ்டேட்ஸ் போறான். அப்புறம் நான்தான்...

இது தான் இப்போதைய இந்திய இளைஞர்களின் புதிய தேசிய கீதம். கண்களில் வாஷிங்டன் படம் பொறித்த டாலர்கள் நடனமாட, பாஸ்போர்ட்டுக்கும்,மேற்படிப்புக்கும் அப்ளை செய்து விட்டு, கம்ப்யூட்டர் டிகிரி முடித்தவுடன், அப்பா, அம்மா உற்றார், நண்பர்களின் ஆசியுடன் அமெரிக்காவுக்கு விமானம்ஏறும் இளைஞர்கள் இன்று அதிகரித்து விட்டார்கள்.

இந்த அமெரிக்க அலை இந்தியாவில் அதிகம் இருப்பதற்குக் காரணம் ஜாவா, ஏ.எஸ்.பி. என அமெரிக்கா விரிக்கும் வலைகள்தான். இந்தநிகழ்வுகளை ஒருவர் படமாக்கியிருக்கிறார். கதையின் களம் அமெரிக்க கனவுகளில் வாழும் இந்திய கம்ப்யூட்டர் இளைஞர்களைப் பற்றியது.

"டாலர் ட்ரீம்ஸ்". இதுதான் படத்தின் டைட்டில். பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த சேகர் கம்முலாஇயக்கியுள்ளார். 100 நிமிஷம் ஓடக் கூடிய இந்தப் படத்தை சேனல் வி வெளியிட்டு வருகிறது. டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் விநியோகிக்கிறது.

இந்தப் படத்தில் நடித்துள்ளர்கள் யாரும் இதற்கு முன்பே, கேமராவையே பார்த்திராதவர்கள். 31 வயதாகும் கம்முலா கூறுகிறார்..எனது சொந்த அனுபவம்தான் இந்தப் படம் எடுக்கத் தூண்டியது. இந்தியாவிலிருந்து அமெரிக்கா போகும் இளைஞர்களில் 66 சதவீதம் பேர் ஆந்திராவைச்சேர்ந்தவர்கள்.

பல இளைஞர்கள் படித்திருந்தும், வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஊழல் மலிந்த அரசு நிர்வாகமும் அவர்களை வெறுக்கடிக்கிறது.இதுபோன்ற பல காரணங்களால்தான் அமெரிக்காவுக்குச் செல்ல பல இளைஞர்களைத் தூண்டுகிறது.

எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் கிடைத்தது. எனது டாக்டர் சகோதரியிடம் ஒரு பெண் வந்தார்.அவர் கர்ப்பமாக இருந்தார். தனக்கு கருக்கலைப்புசெய்யுமாறு அவர் வற்புறுத்தினார். ஏன் என்று கேட்டதற்கு தானும், கணவரும் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும்,அங்கு போய் குழந்தை பெற்றுக்கொண்டால்தான் அமெரிக்க குடியுரிகை கிடைக்கும் என்றார். இது எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

எனது இந்திய ரத்தம் கொதித்தது. இந்த விஷயங்களை வைத்து கட்டாயம் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அன்று இரவுதூங்கினேன் என்றார் கம்முலா.

கம்ப்யூட்டர் இளைஞர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

(ஊழல் மலிந்த இந்திய அரசு நிர்வாகமும் வாய்ப்புகள் இல்லாமையும் தான் நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் அமெரிக்காவுக்கு பறக்க தூண்டியதா?எழுதுங்களேன்...)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X