For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா வந்த முதல் ரஷிய பயணிக்கு நினைவிடம்

By Staff
Google Oneindia Tamil News

Rukmini Arundaleஅப்போது நட்டுவனார்கள் இருந்த காலம். அவர்கள்தான் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் இது ருக்மிணிக்குப் பிடிக்கவில்லை. கலையை மனதில்கொள்ளாமல், தங்களது சுய பலனை மட்டுமே அவர்கள் நினைப்பதாக ருக்மிணி கருதினார். எனவே அவர்களை நிறுத்தி விட்டார். அவரே பயிற்சியளிக்கஆரம்பித்தார். தன்னிடம் பயிற்சி பெற்ற சிஷ்யர்களையே குருவாக்கினார்.

இப்படி மாணவர்களாக இருந்து ஆசிரியர்களாக மாறியவர்களில் சாரதா ஹாப்மேன், கிருஷ்ணவேணி லட்சுமணன், சி.வி.சந்திரசேகரன், லீலா சாம்சன் ஆகியோர்குறிப்பிடத்தக்கவர்கள். நல்ல பெயரைப் பெற்றார்கள்.

சென்னையின் கலை அகராதியில் கலாஷேத்ராவுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக கலாஷேத்ராவில் ஆண்டுதோறும் நடக்கும் இசை, நடன, நாடக விழாஅதி பிரசித்தமானது. கலாஷேத்ராவில் உள்ள பிரமாண்டமான நாடக அரங்கான கூத்தம்பலம் மிகப் பிரபலமானது. பரத நாட்டிய சாஸ்திரத்தில் கூறியுள்ளபடிஇந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

வால்மீகி ராமாயணம், பாகவத மேளா நடனங்கள், குறவஞ்சி நடனம், சகுந்தலம், குமாரசம்பவம், ஜெயதேவ கீதா கோவிந்தம், ஆண்டாள்சரித்திரம், வங்கக் கவி ரவீந்திர நாத் தாகூரின் ஷியாமா, புத்த அவதாரம், மாத்ஸ்யா கூர்ம அவதாரம், தமயந்தி சுயம்வரம், குசேலபாக்யானம்,மீனாட்சி விஜயம், கதகளி, நாட்டுப்புற நடனம் ஆகியவை இந்த விழாவில் இடம் பெறும். இதுதவிர வாய்ப்பாட்டு, வாத்தியக் கச்சேரி ஆகியவையும்உண்டு.

கலையை தனது உயிர் மூச்சாக நினைத்தவர் ருக்மிணி தேவி அருண்டேல். பரதத்தை வெறும் நாட்டியமாக நினைக்காமல் அதை ஒரு உயிர்ப்புள்ள, புனிதமானகலையாகக் கருதியவர். உயரிய லட்சியத்துடன் அதன் வளர்ச்சிக்காக உழைத்தார்.

நடனத்தோடு மட்டுமல்லாது, மற்ற விஷயங்களிலும் அக்கறை காட்டியவர் அத்தை. விலங்குகள் மீது அதிக பிரியம் இவருக்கு. குழந்தைகள் என்றால்உயிர். இவரைக் கவர்ந்தவர்கள் என்று பார்ப்பதை விட, இவரால் கவரப்பட்டவர்கள் அதிகம். இன்னும் "அத்தையின் அடியொற்றி வருபவர்கள் பலர்.

1986-ம் ஆண்டு தனது 82வது வயதில் இந்தக் கலைக் கண்மணி கண் மூடினார். அவர் சென்றாலும் தனக்குப் பின் மிகப் பெரிய இசைப் பாரம்பரியத்தைவிட்டுச் சென்றுள்ளார் ருக்மிணி தேவி. அவரது கலைப் பயணம் இன்றும் கலாஷேத்ரா மூலம் தொடர்ந்து கொண்டுள்ளது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குஇது தொடரும்.

அடுத்து பரதநாட்டியத்தின் சில அம்சங்களைப் பார்க்கலாம்.

(வளரும்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X