For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதம் கண்ட பரதம்

By Staff
Google Oneindia Tamil News

பரதநாட்டியம். இந்தியாவின் கலைப் பொக்கிஷம். தமிழர்களின் பெருமை.

சமூகத்தின் கண்களில் ஒரு காலத்தில் வேறு மாதிரியாகப் பார்க்கப்பட்ட பரதம், பாரம்பரியச் சின்னமாக மாறியதை எப்படிக் கூறுவது என்றுதெரியவில்லை. மக்களால் மாறுபட்ட பார்வையில் பார்க்கப்பட்ட பரதத்தை, மரபின் சின்னமாக மாற்றிய பெருமை சிலருக்கு உண்டு. அவர்களில்முதலில் வருபவர் ருக்மிணி தேவி அருண்டேல்.

அனைவருக்கும் அன்புள்ள அத்தையாக இருந்தவர். அப்படித்தான் அவரை அனைவரும் கூப்பிடுவர். 1904-ல் பிறந்து 1986ல் மறைந்தவர் ருக்மிணிஅருண்டேல். இவரது பின்னணி கலாரீதியாக மிகப் பெரியது. இவரது தந்தை பிரபல சமஸ்கிருத ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி. திருவிசை நல்லூரில் பிறந்தவர். சமஸ்கிருதக்கல்விக்குப் பெயர் போனது திருவிசை நல்லூர். ருக்மிணியின் தாயார் சேஷம்மாள். இசையின் தலைநகரான திருவையாற்றில் பிறந்தவர்.

இப்படிப்பட்ட இசைப் பின்னணியில் வந்த ருக்மிணி மட்டும் சளைத்தவராக இருப்பாரா? 7 வயதிலேயே இந்தப் புலி தனது பாய்ச்சலைத் தொடங்கியது. ருக்மிணியின்தந்தை அப்போது சென்னை பிரம்மஞான சபையில் ஈடுபாடு காட்டி வந்தார். அப்போது ஒருமுறை அங்கு சென்றிருந்த ருக்மிணி தேவி, டாக்டர் அருண்டேலைச்சந்திக்க நேர்ந்தது.

பிரபல கல்வியாளரான அருண்டேல், வாரணாசி மத்திய ஹிந்து கல்லூரியின் முன்னாள் முதல்வர். அருண்டேலைச் சந்தித்த பிறகு ருக்மிணியின் வாழ்வில் புதியஅத்தியாயம் துவங்கியது.1920-ல் அருண்டலேை மணந்தார் ருக்மிணி. பிராமண சமூகத்திற்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது அது. காரணம், ருக்மிணி, அருண்டேலுக்குஇடையே இருந்த வயது வித்தியாசம். ஆனால் காதலுக்கு முன் எடுபடவில்லை.

பிரம்மஞான சபையில் ருக்மிணி தேவியும் மிகவும் ஈடுபாடு காட்டினார். அங்குள்ள இளைஞர்களைக் கூட்டி நாடகம் போடுவார். 1930-ல் ஹிவத்தா என்றஆங்கிலோ இந்திய நாடகத்தை அரங்கேற்றினார். அதுதான் அவரது முதல் நாடகம். நாடகத்தில் வரும் பாத்திரங்களுக்கான உடைகள், அலங்காரம்ஆகிய எல்லாவற்றையுமே ருக்மிணியே பார்த்துக் கொள்வார். அப்போதே அவரது கலை வாழ்க்கைத் துவங்கி விட்டது எனலாம்.

அவர் நடித்த நாடகம் பீஷ்மா. பெரியவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளுக்காகவும் நாடகம் போட்டார் ருக்மிணி. அவர்களுக்கேற்ற கதைகளைத்தயார் செய்து அரங்கேற்றுவார்.

16 வயதில் ருக்மிணிக்குத் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவரது நெடும் கலைப் பயணம் துவங்கியது. அவருக்கு அறிமுகமான எந்தக் கலையையும் அவர்விடவில்லை. கற்றுக் கொண்டார். தெளிவு கிடைக்கும் வரை அதற்குள் மூழ்கி விடுவார்.

பகுதிகள்:12345
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X