For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஐயம் உண்டு

ராகம் - கமாஸ்
தாளம் - ஆதி

பல்லவி

ஐயமுண்டு பயமில்லை மனமே! - இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஐய)
அனுபல்லவி
ல்லவி பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஐய)

சரணங்கள்

1.புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி
பொற்பாதமுண்டு அதன் மேலே:
நியம மெல்லாம் சக்தி நினைவன்றிப் பிறிதில்லை:
நெறியுண்டு: குறியுண்டு: குலசக்தி வெறியுண்டு. (ஐய)

2.மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்
விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு: குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குத் குமரன்கைக் கணையுண்டு. (ஐய)

3.அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந் தோணியி னாலே,
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரமுற்று விடு பட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஐய)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X