For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ் டி.விக்குத் தடை?!

By Staff
Google Oneindia Tamil News

தமிழகத்தில் இரண்டு சானல்கள் தான் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன, ஒன்று சன் டி.வி, மற்றொன்று ராஜ் டி.வி. தரரீதியிலும் சரி, ஒளிபரப்பும் நேர்த்தியிலும் சரி, வெளிநாடுகளை அடைந்தவிதத்திலும் சரி...எல்லாவற்றிலும் சன் டி.விக்கு நிகர் சன் டி.விதான். இருப்பினும், எந்த விதஅரசியல் பின்புலமும் இல்லாமல், இலங்கையிலிருந்து வந்த நான்கு சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டநிறுவனம் ராஜ் டி.வி. (போன தேர்தலின் போது, பாஜகவில் அதன் இயக்குனர் இணைந்தார்). என்ன தான் பல படிகள்முன்னேறியே இருந்தாலும், சன் டி.விக்கு ராஜ் டி.வியின் வளர்ச்சி கொஞ்சம் உறுத்தத் தான் செய்கிறது. எனக்குத் தெரிந்து இவர்கள்அவர்கள் மேல் பல வழக்குகளும், அவர்கள் இவர்கள் மேல் பல வழக்குகளும் போட்டு, போட்டா போட்டி போட்டுவருகிறார்கள். அவ்வப்போது செய்தித்தாள்களில் துணுக்கு செய்திகளாக, சில வழக்கு விபரங்கள் வெளியிடப்படுவதைப்பார்த்திருக்கலாம். எல்லாமே சிறிய சிறிய வழக்குகள் தான் என்பதால் எதுவும் பெரிய அளவில் கவனம் பெறுவதில்லை.

Sun tv logoஇருப்பினும் 97ஆம் ஆண்டு (என்று நினைக்கிறேன்), திமுக ஆட்சியிலிருந்த சமயத்தில், ராஜ் டிவியின் இயக்குனர்களில் ஒருவரானரகுவை, ஏதோ சிறிய வழக்குக்காக போலிஸ் ராஜ் டி.வி அலுவலகத்துக்கே வந்து இழுத்து சென்றது. சில தள்ளு முள்ளுகளும்,மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்து விழுந்ததாகவும் அலுவலகத்தில் இருந்தவர்களின் மூலம் நானும் அறிந்துகொண்டேன்.ஒரு சிலப் பத்திரிக்கைகளில், இதைக் கண்டித்து எழுதியது கூட நினைவுக்கு வருகிறது.எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை என்றால்,தற்போது ராஜ் டி.வி லைசென்ஸை புதுப்பிக்கவில்லை, அனுமதி வாங்காமல் ராஜ் மியூசிக் ஒளிபரப்பாகியுள்ளது என்றுகுற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, ராஜ் டி.வியின் ஒளிபரப்பு தடை செய்யப்படும் போலிருக்கிறது என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.தயாநிதி மாறன் ஒளிபரப்புத் துறை சார்ந்த மத்திய அமைச்சராக இருக்கும் போது, இது போன்ற நோட்டிஸ் அனுப்பப்படுவது ஒருசராசரியான, தற்செயலான நிகழ்ச்சியாகப் பார்க்க முடியவில்லை!

ராஜ் டி.வி என்னதான் முயற்சித்தாலும், சன் டி.வியின் நிலையை குறுகிய காலத்தில் அடைய முடியாது. அது அவர்களின் நோக்கமாகவும்இருப்பதில்லை. சன் டி.வியின் ஒளிபரப்பு விலை கட்டுபடியாகாதவர்கள், தன்னிடம் வந்தாலே போதும் என்ற மனநிலையோடும்,இரண்டாம் இடம் என்பதே நல்ல விஷயம் தான் என்ற கருத்தோடும் தான் தொலைக்காட்சியை நடத்தி வருகிறார்கள் என்பதுதெள்ளத் தெளிவாய் தெரிகிறது. (நான் ராஜ் டி.வி பார்த்து வருடங்கள் ஆகி விட்டது, எனவே தற்போதைய அவர்களின் தரம்எப்படியென்று தெரியவில்லை. வரும் செய்திகளை வைத்துப் பார்க்கும் போது, சன் டி.வி தான் முதலிடம் என்பதில் எந்தசந்தேகமுமில்லை). இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட, சன் டி.வியால் ராஜ் டி.வியின் ஒரு சாசுவதமான வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லையோ என்று தோன்றுகிறது.

Raj tv logoராஜ் டி.வி லைசென்ஸைப் புதுப்பிக்காதது தவறாகக் கூட இருக்கலாம்...ஆனால், இது போல எல்லாத் தொலைக்காட்சிகளையும்நோண்ட ஆரம்பித்தால், ஆயிரத்தெட்டு விஷ(ம)யங்கள் கண்டிப்பாய் இருக்கும். ராஜ் டி.விக்கு கொடுக்கப்படும் இந்த நெருக்கடி,கண்டிப்பாய் அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதற்காகத் தான் ஆரம்பித்திலேயே, தயாநிதி மாறனுக்கு இந்த இலாகாஒதுக்கப்பட்ட போது, பல புருவங்கள் உயர்ந்தன. தனது சகோதரர் பெரிய தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் வேளையில்,எதற்கு இது போன்ற ஒரு இலாகா வேண்டி விரும்பி பெறப்படுகிறது என்று பல நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ராஜ் டி.வி தவறு புரிந்திருக்கலாம்...ஆனால், அது ஒளிபரப்பைத் தடை செய்யும் அளவுக்குப் போக வேண்டிய அவசியமா? ராஜ் டி.விவைகோ நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததால் வந்த வினையா? தொலைக்காட்சி நடத்துபவர்களிடையேபோட்டியும், பொறாமையுமே இருந்தபடி, எந்த விதமான பரஸ்பர ஒத்துழைப்போ அல்லது பரிமாற்றங்களோ இல்லாததன்விளைவா?! எது எப்படியோ....நடக்கும் விஷயங்களில் அரசியலும், பொறாமையும் மறைமுகமாக இருக்கிறதென்பது மட்டும்நிச்சயம். அது நல்லதில்லையென்பதும் நிச்சயம்!

பின்குறிப்பு:- இதைப் பற்றியெல்லாம் யாரும் பெரிய அளவில் விவாதிப்பதோ, விமர்சிப்பதோ கிடையாது. குறிப்பாய், நமது ஊர்இன்வஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம் பத்திரிக்கைகள்....இது குறித்து பெரிய அளவில் விஷயங்களை ஆராய்ந்து எழுதுவது கிடையாது.ஏனென்றால், எல்லோருக்கும் தொலைக்காட்சிகளிடம் ஒரு எதிர்பார்ப்போ, ஆக வேண்டிய காரியங்களோ இருக்கிறது. இந்தஇரண்டு (சன், ராஜ்) தொலைக்காட்சிகளுக்குமே நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், இருப்பினும்...நடப்பவை நல்லதற்கல்ல என்றஎனது கருத்தில் மாற்றமில்லை!

- அருண் வைத்யநாதன்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. காத்திருப்பு
2. உன் வருகை

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X