• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெப்போலியனின் நானும் என் கருப்புக்குதிரையும்

By Staff
|

புத்தக விமர்சனம்: அனுஷிராம் (mr_anusiram@yahoo.com)

Bookஇவர் பிறவிக் கவிஞர் என்றும், சூழ்நிலைதான் அவரை கவிஞராக மாற்றியது என்றும் கவிஞர்களை சிலர்வகைப்படுத்துவது உண்டு. இந்த வகைப்பாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல், கவிதைக்குரிய கனம் இருந்தால்போதும் என்று கவிதைகளை வாசிப்பவர்களும் உண்டு. நானும் என் கருப்புக்குதிரையும் என்ற இந்த நூலும்அத்தகைய கவிதைகளின் தொகுப்பாகவே வந்துள்ளது.

கட்டடக் கலை பயின்று சிங்கப்பூரில் பணியாற்றும் நெப்போலியன், இந்த நூலில் ஒரு கவிஞராக தன்னைநிறுவியுள்ளார். தான் சந்தித்ததையும், தன்னை பாதித்ததையும் தனது கவிதைகளில் பதியம் போட்டு வைத்துள்ளார்கவிஞர்.

வாழ்வின் நிதர்சனங்களை ஒரு பார்வையாளன் கோணத்தில் அணுகாமல் தன்னிலையில் அணுகியிருப்பது இவரதுகவிதைகளின் சிறப்பு. அதனாலேயே பல கவிதைகள் நமக்கு நெருக்கமான உணர்வைத் தருகின்றன.

இவரது ஆரம்ப கால கவிதைகளையும், தற்போதைய கவிதைகளையும் வாசிக்கும்போது எழுத்து நடையிலும்,கவிதை வீச்சிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் புலப்படுகிறது.

நூலின் தலைப்பாகியிருக்கும் கவிதையை விட, இவருக்கு கோல்டன் பாயிண்ட் விருதை வாங்கித் தந்த,இனிமேலாவது என்ற கவிதையே மனதைத் தொடுகிறது. இதையே நூலுக்குத் தலைப்பாக்கியிருக்கலாம்.

புத்தகங்களை மூடும்போது அதில் சிக்குண்டு உயிர் விடும் ஜீவன்களுக்காக இவர் வைக்கும் கோரிக்கை எல்லாபுத்தகப் பிரியர்களையும் சற்றே யோசிக்க வைக்கும். இந்த ஒரு கவிதையே இந் நூல் முழுமைக்கும் உரைகல்லாகும்.

கணவன்-மனைவிக்கு இடையேயான உறவின் இன்னொரு கோணத்தை ரகசியம் கவிதை சொல்கிறது.கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள முரண்பாட்டை நகை என்ற கவிதை இப்படிச் சொல்கிறது.

தினந்தோறும்

சாமிக்குப்

போட்டுப் போட்டு

அழகு பார்த்த

பூசாரி வீட்டில்

கல்யாண வயதில்

நாலு பெண்பிள்ளை

உண்டென்று அறிந்திடுமோ

அந்தச் சாமி?

இவை தவிர, வேதம், பாரதீ, உள்ளே, முரண்பாடுகளின் சுகம், தமிழுக்கு அவனென்றும் பேர் போன்ற கவிதைகள்குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. காதலை விட, காதல் தோல்வி இவரை அதிகம் பாதித்துள்ளது என்பது இந்தநூலை வாசிக்கும்போது உணர முடிகிறது.

கவிதைக்குரிய பாடுபொருளை பல திசைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கும் திறன் இயல்பாகவே இவருக்குவாய்த்திருக்கிறது.

Nepolian

 • கல்லறைப் பூக்களிலும்

  தேன் குடித்தபடி

  வண்ணத்துப் பூச்சிகள்

 • அல்லா- ராமா

  டியர் இறைவா,

  நீ இரு வேடத்தில்

  நடிக்கப்போய்

  இந்தியாவே குழம்பியிருக்கப்பா

  போன்ற கவிதைகளில் ஒரு பரந்துபட்ட கவிதை சாம்ராஜ்யம் தனக்கிருப்பதை நெப்போலியன் உணர்த்துகிறார்.

  அச்சுப் பிழைகள் எதுவுமின்றி பிரித்திமா பதிப்பகம் இதை புத்தகமாக்கியுள்ளது.

  சில கவிதைகளைக் (ஆரம்ப கால கவிதைகளாக இருக்கலாம்) கழித்துப் பார்த்தால், பல நல்ல கவிதைகள் பரவலாகஅடங்கியுள்ள தொகுப்பு இது. மொத்தத்தில் நெப்போலியன் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.

  (நானும் என் கருப்புக்குதிரையும்: நெப்போலியன், பிரித்திமா பதிப்பகம், 14/24, காமராஜர்புரம் 15வது தெரு, புதுக்கோட்டை: 622001பக்கம்: 176, விலை: ரூ.70

 •  
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X