• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

தமிழ் வழி திருமணம்- (பகுதி-4)

By Staff
|

11. மாலை மாற்றுதல், மணவறையை சுற்றி வருதல்

மணமக்களின் கைகளில் மாலைகளைக் கொடுத்து மும்முறை மாலை மாற்றிக் கொள்ளச் செய்ய வேண்டும்.

Marriage Celebrationமணமகன்: நன்னாளாம் இந் நாளில் இறைவன், திருவருளால் நம் உற்றார், உறவினர், குலதெய்வமறிய, நான் உன்னைத் தமிழ் முறைப்படிதிருமணம் செய்து கொண்டேன். அதற்கு அடையாளமாக இந்த மலர் மாலையை அணிவிக்கிறேன். இல்லறமாம் நல்லறத்தை இனிதேஎன்றும் இணைந்து நடத்துவோம் - என்று கூறி மாலையை மாற்ற வேண்டும்.

மணமகள்: நன்னாளாம் இந் நாளில் இறைவன் திருவருளால் நம் செழுங்கிளை, உரிமைச் சுற்றம், உறவாம் நட்பினர், முன்னோர் குலதெய்வமறிய, நான் உங்களைத் தமிழ் முறைப்படிதிருமணம் செய்து கொண்டேன். அதற்கு அடையாளமாக இந்த மலர் மாலையைஅணிவிக்கிறேன். இல்லறமாம் நல்லறத்தை இனிதே என்றும் இணைந்து நடத்துவோம் - என்று கூறி மாலை மாற்ற வேண்டும்.

"குரும்பை முலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு

குறிப்பினொடும் சென்று அவள்தன் குணத்தினை நன்கறிந்து

விரும்புவரம் கொடுத்தவனை வேட்டருளிச் செய்த

விண்ணவர் கோன் கண்ணுதலோன் மேவிய ஊர் வினவில்

அரும்பருகே சுரும்பருவ அருபதம் பண்பாட

அணிமயில்கள் நடமாடும் அணி பொழில் சூழ் அயலின்

கரும்பருகே கருங்குவளை கண் வளரும் கழனி

கமலங்கள் முகம் மலரும் கலைய நல்லூர்காணே" (சுந்தரர் - தேவாரம்)

என்று அப்போது ஓத வேண்டும்.

பின்னர் மணமகனின் கையோடு மணமகளின் கையினை இணைத்துச் சொல்லும் பொருளும் என நடமிடும் பூங்கொடியென இறைவியையும், மங்கலப் பெண்டிர் ஒருவர்புனித நீரினை முன் தெளித்துச் செல்ல -மணமக்கள் இருவரும் தொடர்ந்து மும்முறை வலம் வரச் செய்ய வேண்டும்.

அப்பொழுது,

அ) மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும்பாடி

போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்ற போது

காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் (நாவுக்கரசர் - தேவாரம்)

ஆ) மாதர் மடப்பிடியும் மட அன்னம் அன்னதோர்

Marriage Celebrationநடைஉடை மலைமகள் துணை என மகிழ்வர்

பூத இனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர்

அவர்படர் சடைந் நெடு முடியதோர் புனலர்

வேதமொடேழிசை பாடுவராழ் கடல் வெண்டிரை

இரைந்நுரை கரை பொருது விம்மி நின்றயலே

தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை

எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே (ஞானசம்பந்தர் - தேவாரம்)

என்றோத வேண்டும். நிறைகுட நீரினை இருவருக்கும் கொடுத்து அருந்தச் செய்ய வேண்டும்.

12. இடம் வலம் மாற்றி அமர்தல்

மாலை மாற்றிக் கொண்ட பின், மணமக்கள் இருவருடைய வலக் கைகளிலும் சிறிது மஞ்சளரிசி கொடுத்து இணைத்துக் காதலர்கள் என்றும், பசியும் பிணியும்இன்றி, வசியும் வளனும் சிறந்து வாழ்க, வாழ்க! என்று கூறி வாழ்த்தி, இணைந்த கைகளுடன் மும்முறை எரியை வலம் வந்து, கணவன் மனைவியானதற்குஅடையாளமாக மணமக்களை இடம் மாற்றி அமரச் செய்ய வேண்டும். (அதாவது மணமகனுக்கு இடப்புறத்தில் மணமகளை அமரச் செய்தல் வேண்டும்)அப்பொழுது,

"ஓதி நன்குணர்வார்க்கு உணர்வுடைை ஒருவர்

ஒளிதிகழ் உருவம் சேர் ஒருவர்

மாதினை இடமா வைத்த எம் வள்ளல்

மான்மறி ஏந்திய மைந்தர்

ஆதி நீ அருளென்று அமரர்கள் பணிய

அலை கடல் கடைய அன்றெழுந்த

பாதி வெண்பிறை சடைவைத்த எம்பரமர்

பாம்புர நன்னகராரே" (ஞானசம்பந்தர் - தேவாரம்)

என்றோத வேண்டும்.

13. நலுங்கு செய்தல்

(குல மரபுகளுக்கு ஏற்ப) மங்கலப் பெண்டிர் மஞ்சளரிசி மலர்கள் இவற்றைக் கொண்டு நலுங்கு நிகழ்வினை செய்ய வேண்டும். அப்பொழுது;

"ஆறு கெடுப்பார்அயனும் அரியும்

அன்றி மற்றிந்திர னோடமரர்

நறுமுறு தேவர்கணங்களெல்லாம்

நம்மிற்பின் பல்லதெடுக்க ஒட்டோம்

செறிவுடை மும்மதில் எய்தவல்லி

திரு ஏகம்பன் செம்பொற் கோயில்பாடி

முறுவற் செவ்வாயினீர் முக்கண் அப்பற்கு

ஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே" (திருவாசகம்)

என்றோத வேண்டும்.

Marriage Celebration14. ஆன்றோர்கள் ஆசி பெறுதல்

நலுங்கு எடுத்தல் நிகழ்வுகளைக் குல மரபுகளுக்கு ஏற்ற வகையில் செய்த பின்னர், ஆன்றோர்களிடம் ஆசி பெறச் செய்ய வேண்டும்.

அ.) ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஓராயிருர் ஈருருக் கொண்டு

ஆனந்த வெள்ளத்திடை திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர்

ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின்

ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இவ்வணி நலமே (மாணிக்க வாசகர்)

ஆ.) ஈருடலும் ஓருயிராய் ஏற்ற நீங்கள் செம்பொருட்டுப்

பேருடலாய் அன்பு அருளே பேணி மொழி நாடு மக்கள்

நலத் தொண்டு பண்பாய்ச் செய்யுங்கள் பரிந்து

வாழ்க மணமக்கள் வாய்மை ஈரெட்டெய்தி சூழ் செல்வம்

மக்கள் சுற்றமொடும் வாழ்க. திருக்குறள், தொண்டர்

நூல் சித்தாந்தம் உருக்கமுடன் ஓதி வாழ்க வாழ்கவே

இ.) உடலுயிர் போல மணமக்கள் ஓங்கி நீர் வாழ்க

கண்ணொளி போல காதலீர் கலந்து நீர் வாழ்க

நகம் சதைபோல நங்கை நம்பி நயத்து நீர் வாழ்க

மணியொளி போல் மணமக்கள் இணைந்து வாழ்க

மலர்மணம் போல் மங்கலத்தீர் வாழ்வித்து வாழ்க வாழ்க வாழ்கவே

என வாழ்த்துக்களை ஓதுக.

15. காப்புக் களைதல்

மணமக்களுக்குத் திருநீறு கொடுத்து முன்பு போல் தேங்காய், பழம் இவற்றைத் தட்டில் வைத்து மணமக்களைப் பிடித்துக் கொள்ளச் செய்து மணமகன்,மணமகளின் காப்பினை அவிழ்க்க வேண்டும். அப்பொழுது,

"ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே

பேறுலகினுக்கென வரும் பெரியவர்க்கு

வேறுபல காப்புமிகை என்றவை விரும்பார்

நீறு திரு நெற்றியின் நிறத்தி நிறைவித்தார்" (பெரியபுராணம்)

என்றோத வேண்டும்.

மணமக்களுக்குத் திருநீறு, குங்குமம் கொடுத்துப் பின் கற்பூரம் ஏற்றிக் கண்ணேறு கழிக்க வேண்டும்.

Marriage Celebration16. கதிரோன் வணக்கம்

உலகின் புற இருளை நீக்கும் கதிரோனை மணமக்கள் இருவரும் மலரிட்டு வணங்கச் செய்க. அப்பொழுது,

அருக்கனில் சோதி வைத்தோன் திருத்தகு

மதியில் தண்மைவைத்தோன் திண்திறல்

தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்

வானில் கலப்பு வைத்தோன் மேதகு

காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ்

நீரின் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட

மண்ணில் திண்மை வைத்தோன் திருவடி வணங்குகிறோம் (திருவாசகம்)

என வணங்கச் செய்க.

17. பின்னர், மணக்களுக்குப் பால் பழம் கொடுக்க.

வாழ்த்து

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணி இலாத உடலும்

சலியாத மனம் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானம்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதி காடவூரின் வாழ்வே

அதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி

வாழ்க அறவோர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம் அரன்நாமமே

சூழ்க வையகம் தீர்கவே!

(விழா ஆசிரிருக்கு ஒரு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்கு, வைத்து காணிக்கை, பயணச் செலவு, வேட்டி துண்டுகொடுத்து அவரிடம் ஆசி பெறுக.)

யாவும் நலமாகி வையம் சிறக்க!

நன்றி:

மணிவாசகர் அருட்பணி மன்றம்

பேரூர்செட்டிப்பாளையம், கோவை.

- அஸ்வின் தாயுமானவர்(arivashwin@sancharnet.in)

தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி?- (பகுதி-3)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X