• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள வெறியர்களும்

By Staff
|

Jaffna Libraryஇருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரீக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ்மக்களுக்குச் செய்தது.

1981ம் ஆண்டு சூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக் காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்டயாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.

97,000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின.தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியைத் தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர்.

தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணி களையும்,வரலாற்று உண்மைகளையும் நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது,

தேசிய இனங்களை ஒடுக்க முயன்ற பேனவாத சர்வதேச அரசுகளின் செயல்களில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதும் இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.

இப்பேரழிவுச் செயல் நிகழ்த்தப்பட்ட சூன் மாதம் முதலாம் திகதிக்கு (1981) முதல் நாள் நடைபெற்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.இவையிரண்டையும் தர்க்கித்த பின்னர் இவற்றிற்கு முன்னோடியாக-ஏன் வழி காட்டியாக இருந்த

இட்லரின் நாசி நடைறைகளையும், அதன் சட்டங்களையும், செயற்பாடுகளையும் சிங்கள் அரசுகளோடு ஒப்பிட்டுத் தர்க்கிக்க நாம் விழைகின்றோம்.எல்லாவற்றிற்கும் முன்பாக தென்கிழக் காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் எவ்வாறுதோன்றியது, வளர்ந்தது என்பதைக் குறித்து எமக்குக் கிடைத்த தகவல் களைத் தர விரும்புகின்றோம்.

1933ம் ஆண்டு ஆ. செல்லப்பா என்ற அன்புள்ளம் கொண்ட தமிழர் தன்னுடைய இல்லத்தில் இலவச நூல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் யாம்பெற்ற புலமைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நல்லெண்ணத்தைத் தெரிவித்தார்.

செல்லப்பாவின் சிந்தனையை ஏற்றுக்கொண்ட பல அறிவு ஜீவித் தமிழர்கள், 1934ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் திகதி ஒரு நூல் நிலையத்தைஆரம்பித்தார்கள். அன்றைய நாட்களில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு சைராக் அவர்கள் தலைவராகவும்; திரு செல்லப்பா அவர்கள்செயலாளராகவும் இந்த நூல் நிலையக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்த நூல் நிலைய நிர்வாகக் குழுவினரின் அயராத உழைப்பின் காரணமாக 1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று, யாழ்ப் பாணம்மருத்துவமனை வீதியில் உள்ள ஓர் வாடகை அறையில் 844 புத்தகங்களுடனும், 30 செய்திப் பத்திரிகைகள், மற்றும் சஞ்சிகைகளுடனும் ஒரு நூல் நிலையம்உருவானது.

மிகவும் வயது குறைந்த இளைஞர்களினதும், வயது முதிர்ந்த முதியவர்களினதும் ஆர்வம் காரணமாகவும், ஆதரவு காரணமாகவும் இந்த நூல் நிலையத்தின்நூல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது.1935ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணப் பிரதான வீதியில் உள்ள ஒரு வாடகை கட்டடத்திற்கு இந்த நூல் நிலையம் இடம் பெயர்ந்தது. 1936ம் ஆண்டுயாழ் மகாநகராட்சி மண்டபம் நிர்மாணிக்கப் பட்டது.

இந்த நூல் நிலையம் இதற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்திற்கு மீண்டும் இடம் பெயர்ந்தது.அந்தக் காலத்திலேயே, இந்த நூல் நிலையத்துக்குய சந்தா மூன்று ரூபாய்கள் ஆகும். ஆனால் அறிவுத்தாகம் கொண்ட தமிழர்களின் ஆர்வத்துக்கு ஈடுசெய்ய முடியாத அளவில் இந்த நூல் நிலையம் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நூல் நிலையம் விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்துடன் ஒரு நிரந்தரமான பெரிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எமது(அன்றைய) தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.

அப்போது யாழ். மாநகரசபை முதல்வராக இருந்த திரு சாம் சபாபதி அவர்களின் தலைமையில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டன.குதூகல விழா, இந்திய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி விழாக்கள், நல்வாய்ப்புச் சீட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டன.

எதிர்பார்த்ததையும் விட ஏராளமான தொகை திரட்டப்பட்டது என்ற விடயத்தை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1953ம் ஆண்டு, நூல் நிலையத்திற்கான நிர்வாகக்குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது. வணக்கத் துக்குரிய பிதா லோங் அவர்கள் இந்த நிர்வாகக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அன்னாரின் சிலை ஒன்று யாழ்ப்பாணப் பொதுசன நூல் நிலையத்தில் நிர்மாணிக் கப்பட்டது. 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால்தீக்கிரையாக்கப்பட்ட போது வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களுடைய சிலையும் அக்காடையர்களால் சிரச்சேதம்செய்யப்பட்டது.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியன்று இந்த நூல் நிலையத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. திராவிடக் கட்டடக் கலை நிபுணரான ளு.நரசிம்மன் அவர்களைச் சென்னை யிலிருந்தும், பேராசியர் அரங்கநாதன் அவர்களை டெல்லியிலிருந்தும், நூல் நிலைய நிர்வாகக்குழு அழைத்துஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றது.

முதல் கட்டப் பணிகள் 1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி நிறைவு பெற்றன. சிறுவர்களுக்கான பகுதி ஒன்று 1967ஆம் ஆண்டுநவம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டில், நூல் நிலையத்தின் முதல்மாடியில் கூட்டங்கள் நடத்துவதற்காக மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது.

மே மாதம் 31ஆம் திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற, தமிழர் விடுதலைக் கூட்டணித் தேர்தல் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தின் போது ஒரு சிங்களப் காவலர் கொல்லப்பட்டார்.

இதனை அடுத்து துரையப்பா ஸ்டேடியத்தில் நிலை கொண்டிருந்த சிங்கள காவலர்கள் யு.சுப்பையா ரூசன்ஸ் கடை உட்படப் பல கடைகளை உடைத்தும் எரித்தும்,கொள்ளையிட்டும் அடாவடித்தனங்களில் இறங்கினர்.

நாச்சிமார் கோவில் தேருக்கு தீ மூட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல பொதுமக்களின் வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தமிழர்கூட்டணியின் கட்சிச் செயலகம் தீயிடப்பட்டது. யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும், வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதற்கு அடுத்த நாள் இரவு ஜூன் 1ஆம் திகதி யாழ் நூல் நிலையத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த மூன்றாவது மாடியில் தான்கிடைத்தற்கு அரிய சுவடிகளும், மிக அரிய நூல்களும் இருந்தன. மிக விரைவில் நூல் நிலையத்தின் சகல பகுதிகளுக்கும் தீ பரவியது.

யாழ். நூல் நிலையக் கட்டடத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அதனை முழுமையாக நாசமாக்கும் விதத்தில் நன்கு திட்டமிடப்பட்டே இப் பேரழிவுநடத்தப்பட்டது.

அன்றைய தினம் நடத்தப்பட்ட கோர தாண்டவத்தில் ஈழ நாடு பத்திரிகைக் கட்டடம் உட்பட முக்கியமான புத்தகக் கடைகளும் எரிக்கப்பட்டமைஇங்கு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் அமைந்திருந்த தமிழ்ப் புலவர்களின் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் என்று கருதப்பட்ட விடயங்கள் மீதே சிங்களப் பேனவாதிகள் தமது அழிவுத் தாக்குதல்களை நடத்தினார்கள் என்பதில்ஐயமில்லை. தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் படிக்கின்ற நூல்கள் அன்று தீக்கிரையாக் கப்பட்டன.

அன்றைய சிங்கள அரசினால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த நாசகாரச் செயலை முன்னெடுக்கவும், கண்டு களிக்கவும் இரண்டு சிங்கள அமைச்சர்கள்யாழ்ப்பாணத்திற்கு வந்தமையாகச் சொல்லப்பட்டது. ஒருவர் சிறில் மாத்தியூ. மற்றவர் காமினி திசநாயக்கா.

இந்த பண்பாட்டு அழிப்பினைத் தொடர்ந்து நடந்த அல்லது நடக்காத விடயங்கள் சில படிப்பினைகளைத் தந்தன. நூல் நிலைய அழிப்பு குறித்து உத்தியோக பூர்வவிசாரணைகள் எதையும் சிங்கள அரசு நடத்தவில்லை.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பின்னர்பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் கொண்டுவர முயன்ற போது சிங்கள அரசு அவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத்தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

சிங்களப் பாரளுமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவிதமான நீதியோ நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்ற உண்மை மீண்டும் ஒரு முறைநிரூபணமாகியது.

இதன் பின்னனியில் தான் சிங்கள பேனவாத அரசியல் சட்டங்களுக்கும் இட்லரின் நாசிச் சட்டங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தர்க்கிக்கவிழைகின்றோம். சட்டங்கள் மட்டுமல்ல, அவையினூடாக மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1935ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி நியூரம்பெக், ஜேர்மனியில் நடைபெற்ற நாசி மகாநாட்டில் சட்டமாக்கப்பட்ட சில விடயங்கள்பின்னாளில் அதாவது 1948, 1949களில் சிறிலங்கா அரசால் சட்டமாக்கப்பட்டன. உதாரணம் குடியுரிமைச் சட்டம் (இலங்கை).

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில்பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர்.

1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று இட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான்! சிங்களக் காடையர்கள் செய்ததுபோல, அவர்கள் பெர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

யூத மக்கள் மீது ஜேர்மன் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களையும், கொலைகளையும் கோயபல்ஸ் இவ்வாறு தான் நியாயப்படுத்தி வந்தார்.ஏதொவொரு திடீர் உணர்ச்சி வேகத்தில் சிந்திக்காமல், திட்டமிடாமல், இவ்வாறான செயல்களைப் போர்வீரர்கள் புரிந்து விட்டார்கள். நாசிக்களின்இதே காரணத்தைத் தான் சகல சிங்கள அரசுகளும் இதுவரை சொல்லி வருகின்றன.

ஆப்கானிஸ்தானின் அன்றைய தாலிபான் அரசு மிகப்பழைமை வாய்ந்த புத்த சிலைகளை அழிக்க முனைந்தபோது, பண்பாட்டு மேன்மை குறித்து புத்தபிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா பாகிஸ்தானுக்குப் பறந்தோடிச் சென்று புத்த சிலை அழிப்பைத் தவிர்ப்பதற்கு பாகிஸ்தானின் உதவியை நாடினார்.கொழும்பு ஊடகங்கள் இதனை முன்னிலைப்படுத்தின.

ஆனால் விலை மதிப்பற்ற யாழ். நூல் நிலையம் எரிக்கப்பட்ட போது மெளனம் தான் மொழியாகிற்று!

சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கு, தமது நாட்டுக்கு, தமது பண்பாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை வரலாற்று ரீதியாக நினைவு கூர்வதற்காக மிகமுக்கியமான அழிவுகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களைப் பாதுகாத்து வருவதை நாம் உலகளாவிய ரீதியில் காணக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்டநினைவுச் சின்னம் இப்போது எமக்கு இல்லை.

ஆயினும் வரலாறு மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை, ஒரே ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது. சிங்கள பெளத்தப் பேனவாத அரசுகளிடமிருந்துதமிழ் மக்களுக்கு நீதியான, நேர்மையான, நிரந்தரமான, நியாயமான, கெளரவமான சமாதானத் தீர்வு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

(இவ் ஆய்வு 30.05.05 அவுஸ்திரேலியா மெல்பேர்ன் - தமிழ்க்குரல் - வானொலியின் ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.

-தென் செய்தி

- - சபேசன்(seide@md2.vsnl.net.in)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more