For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை குடிநீரும் பட்ஜெட்டும்

By Staff
Google Oneindia Tamil News

meenakshi sundaramசென்னை நகர குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்திய அரசு கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தைஅறிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் லிட்டர் நல்ல தண்ணீர் இதன் மூலம் தயாரிக்கப்படும் என்று மத்தியஅரசின் பட்ஜெட் குறிப்பிடுகிறது. சுதந்திரத்துக்குப் பின் குடிநீர் வழங்க இப்படி ஒரு பெரியதிட்டத்தை ஆளுவோர் யாரும் யோசித்துக் கூட பார்த்ததில்லை.

பல நிபுணர்கள் இது பற்றி நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு அறிவித்த மழைநீர் அறுவடை கூட யானைப் பசிக்கு சோளப் பொறி கொடுத்தகதையாகிவிட்டது. ஏரி, குளம் பராமரிப்பு பற்றி சத்தமும் நுரையும் அதிகம் இருந்ததே தவிர, பணஒதுக்கீடு சல்லிக் காசாகவே இருந்தது.

நன்னீராக்கும் திட்டம் வேகமாக நிறைவேற, மக்களுக்கு குடிநீர் கிடைத்திட, கட்சிகாழ்ப்புணர்ச்சிகளைத் தாண்டி மத்திய அரசு, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

மத்திய அரசின் இத் திட்டத்தை மாநில அரசு எப்படிப் பார்க்கிறது என்பது அடிப்படையான கேள்வி.அந்தப் பார்வை இத் திட்டத்தை விரைவுபடுத்திட உதவிடுமா? குறைகள் கூறி முட்டுக் கட்டைபோடுமா?. மாநில அரசு பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை.

இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றப் போவது அரசுத் துறை என்றும் கூட்டுத் துறைஎன்றும் தெளிவில்லாமல் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசு.

மத்திய அரசு, மாநில அரசு, தனியார் மூவரும் கூட்டு என்றால் நிர்வாகம் யார் கையில்?. இது ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் குடிநீர் வழங்கும் நோக்கத்தோடு கட்டப்படுமா? குடிநீரைவியாபார நோக்குடன் தயாரிக்குமா?. இதற்கு மத்திய அரசு விடை கொடுத்தாக வேண்டும்.

தண்ணீரை (முடிந்தால் காற்றைக் கூட) வியாபாரப் பொருளாக ஆக்குவதில் அதாவதுதனியார்மயமாக்குவதில் ஆர்வம் காட்டுகிற மத்திய அரசும் அதில் வெகுதூரம் சென்றுவிட்ட தமிழகஅரசும் இத் திட்டத்தை எந்த நோக்கத்தோடு நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவர் என்பதுதெரிந்திருப்பதால் இதில் பொது மக்களின் தலையீடு அவசியமான ஒன்று.

மழை நீர், நிலத்தடி நீர், கடல் நீர், கழிவு நீரை சுத்தப்படுத்துதல், இயற்கை சூழலை பாதுகாத்தல்போன்ற விஷயங்களில் அரசின் தெளிவான கொள்கை அறிவிப்புகள் வேண்டும்.

அ. சென்னை நகர மக்களுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் நபர் ஒன்றுக்கு 100லிட்டர் தண்ணீர் குழாய் மூலம் வழங்க வேண்டும்.

ஆ. மழை நீரும், நிலத்தடி நீரும் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் என்று ஒதுக்கிட வேண்டும். இதில்பற்றாக்குறையை சரி கட்டவே கடல் நீரை நன்னீராக்குவதை பயன்படுத்த வேண்டும். தண்ணீர்வியாபாரம் உள்பட, குளிர்பானங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் தேவைகளுக்கும் கடல் நீரைநன்னீராக்கி பயன்படுத்திட அறிவுறுத்த வேண்டும்.

இப்போது நிலத்தடி நீரை தொழிற்சாலைகள் எடுப்பதால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இ. ஏரி, குளங்களைப் பராமரிக்க மத்திய அரசின் பட்ஜெட் அறிவிபபை பயன்படுத்தி நிதி ஒதுக்கீடுபெற்று வேகமாக செயல்படுத்திட வேண்டும். இவைகளை உள்ளாட்சி அமைப்புக்கள்அதிகாரத்துக்குள் கொண்டு வர வேண்டும்.

ஈ. கடல் நீரை நன்னீராக்கும் தொழில்நுட்படம் மிக நவீனமானதாக, சூழலுக்கு கேடில்லாத வகையில்இருக்க வேண்டும்.

Water preparationஉ.. பெரு நகரங்களில் லாரிகள் மூலம் நீர் வழங்குவதை விடுத்து, குழாய் மூலம் சுத்தம்செய்யப்பட்ட நீர் வழங்குவது அரசின் கொள்கையாக இருக்க வேண்டு. இது சிக்கனமானது,விரயத்தையும் தடுக்கலாம்.

சென்னையில் வீட்டு வரி வசூலாகிற அளவுக்கு மெட்ரா வாட்டர் கட்டணம் வசூலிக்கப்படுதில்லை.மொத்த தொகையில் சில சதவீதமே வசூலாகிறது. இதனால் தண்ணீர் கட்டணத்தை ரத்து செய்துவிட்டுவீட்டு வரியோடு சேர்த்து வசூலிக்கும் முறையைக் கொண்டு வரலாம்.

இறுதியாக, தண்ணீரை வியாபாரமாக்கும் திட்டம் எந்த நாட்டிலும் உருப்பட்டதில்லை. இதனால்தாவாக்கள் தான் அதிகமாகியுள்ளன. இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

(திரு வே.மீனாட்சி சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழுஉறுப்பினராவார்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X