ஸ்ரீ பரதாலயா...

Subscribe to Oneindia Tamil

Shree Bharatalayaசென்னையின் முன்னணி நுண் கலை மையமாகவும், பரதநாட்டியம், கர்நாடக இசை, சமஸ்கிருதம் ஆகியவற்றை திறம்பட போதிக்கும் பயிற்சி மையமாகவும் விளங்குகிறது ஸ்ரீ பரதாலயா.

1970ம் ஆண்டு பேராசிரியர் சுதாராணி ரகுபதி, பத்மபூஷன் மறைந்த மதுரை என்.கிருஷ்ணன், சென்னை மியூசிக் அகாடமியின் முன்னாள் செயலாளரான மறைந்த செளந்தரராஜ அய்யங்கார் ஆகியோரால் தொடங்கப்பட்டதுதான் ஸ்ரீபரதாலயா.

தற்போது 36வது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் ஸ்ரீ பரதாலயா, நுண் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் பெரும் பங்காற்றியஉள்ளது. நுண் கலை உலகுக்கு பல படைப்புகளைக் கொடுத்த முன்னணி மையமும் கூட.

ஸ்ரீ பரதாலயாவின் இயக்குநர் - அறங்காவலராக அக்டோபர் 2005ம் ஆண்டு வரை இருந்து சிறப்பித்தவர் மறைந்த வித்வான் மதுரை என்.கிருஷ்ணன். தியாகராஜ சுவாமிகளின் நேரடி குரு - சிஷ்யா பரம்பரையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.

திறமையான, ஒரிஜினல் கம்போசரான அவர், பரதநாட்டியத்திற்காக நான்கு முழுமையான மார்க்கங்களை இயற்ரியுள்ளார். இவரது படைப்புகள் தற்போது நூல் வடிவிலும், ஆடியோ சிடி மற்றும் டிவிடி வடிவில் கிடைக்கின்றன.

ஸ்ரீ பரதாலயாவின் குருக்களும், ஆசிரியர்களும், கலைஞர்களும் மிகுந்த திறமையானவர்கள் மட்டுமல்லாது இசையுலகில் நல்ல அங்கீகாரமும் பெற்றவர்கள் ஆவர்.

பரதாலயாவை நிர்வகித்து வருபவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பேராசிரியர் சுதாராணி ரகுபதி, சர்வதேச அளவில் புகழ் பெற்றவர். தஞ்சாவூர் நால்வர் வழி வந்தவர். பரதநாட்டியத்தின் இன்றைய சிறப்பான நிலைக்கு அவர்தான் முக்கிய காரணம்.

பரதாலயா, பல்வேறு நடன நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது. அவற்றை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பலமுறை அரங்கேற்றியுள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற நடன நிகழ்ச்சிகளில் பரதாலயாவின் முத்திரை இடம் பெறத் தவறியதே இல்லை.

ராமாயணம், சக்தி பிரபவம், கிருஷ்ணம் வந்தே ஜெகத் குரும், ஏகமேவ நா திவாயம், வந்தே குஹம் உமாசுதம், சங்கர லோக சங்கரா, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நடன - நாட்டிய நிகழ்ச்சிகளை பரதாலயா அரங்கேற்றியுள்ளது.

இந்த நிறுவனத்தின் சார்பில் ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட ராமாயண - பால காண்டம், மத்திய அரசின் கலாச்சார பயிற்சி மற்றும் மூலாதார அமைப்பினால் வீடியோ கேசட் வடிவில் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ பரதாலயா குறித்து மேலும் அறிய

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+