For Daily Alerts
Just In
அரசின் தமிழ் அறிவிப்பு பலகைகளில் பிழைகள்: பாஜக
அரக்கோணம்: தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அறிவிப்பு பலகைகளில் பிழைகள் காணப்படுவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஒன்றிய பாஜக அமைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், தமிழக அரசு உள்ளாட்சித் துறை மூலம் தமிழகமெங்கும் 'எனது நகரம், எனது பெருமை' என்னும் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளது. இதில் 'நான் சுத்தமாகவும் பசுமையாகவும் பேனுவேன்' என்ற வார்த்தை உள்ளது.
'பேணுவேன்' என்பதற்கு பதில் தவறான எழுத்து இந்த அறிவிப்புப் பலகைகளில் காணப்படுவது, தமிழை செம்மொழியாக்கிய தமிழக அரசுக்கு இது தலைக்குனிவு ஏற்படுத்தும் விஷயமாகும்.
உடனடியாக அரசு அதிகாரிகள் இந்தப் பிழையை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.