'சீமான்' 10ம் ஆண்டு விழா
ஷார்ஜா: சீமான் எனப்படும் ஷார்ஜா இஸ்லாமிக் மெட்ராஸ் அசோசியேஷன் அமைப்பின் 10ம் ஆண்டு விழா 28ம் தேதி மாலை நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் பல தன்னார்வத் தொண்டுகளையும், மதம் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளையும் திறம்பட செய்து வரும் ஷார்ஜா இஸ்லாமிக் மெட்ராஸ் அசோசியேஷன் அமைப்பு தனது 10வது ஆண்டு விழாவை வருகிற 28ம் தேதி கொண்டாடவுள்ளது.
துபாயில், கிஸல் பகுதியில் உள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட் அருகே (அல்முல்லா பிளாஸா பின்புறம்) உள்ள துபாய் ஸ்காலர் தனியார் பள்ளியின் உள்ளரங்கத்தில் 28ம் தேதி மாலை 4.30 மணிக்கு விழா நடைபெறுகிறது.
சீமான் செயற்குழு உறுப்பினர் மெளலவி ஜே.எஸ்.எஸ். அலி பாதுஷா மன்பா திருமறை வசனம் ஓதி விழாவினை தொடங்கி வைப்பார்.
விழாவுக்கு அல்ஹாஜ் ஏ.எம். நூருல் அமீன் தலைமை தாங்குகிறார். ஏ.ஏ.ரஹ்மான் வரவேற்பு நிகழ்த்துவார்.
விழாவில் சீமான் ஆண்டு விழா நினைவு மலர் வெளியிடப்படுகிறது. மலரினை இடிஏ நிறுவனர் பி.எஸ்.அப்துல் ரஹ்மானின் துணைவியார் டாக்டர் ரஹமதுன்னிஸா அப்துல் ரஹ்மான் வெளியிடுவார்.
முக்கிய உரையினை, கீழக்கரை தாசம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.சித்தி சுமையா நிகழ்த்துவார்.
மதுரை சீதக்காதி அறக்கட்டளை துணைப் பொது மேலாளர் ஜனாப் எஸ்.ஷேக் தாவூத் கான் வாழ்த்துரை வழங்குவார்.
கவிஞர் அபிவை, தாஜூதீன், ஏ.எஸ்.தாஜூதீன், கம்பம் முகம்மது பாக்கவி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துவர்.
நிகழ்ச்சியில், 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் பங்கு பெறும் கிராஅத் மற்றும் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்கான நடுவர் குழுவில் காஞ்சி மெளலவி அப்துர் ரவூப் பாக்கவி, முதுவை மெளலவி பஷீர் சேட் ஆலிம் இடம்பெறுகின்றனர்.
சீமான் தலைவர் முகம்மது மாலிக் நன்றியுரை வழங்குவார். நிகழ்ச்சியினை ஏசியாநெட் வானொலி தமிழ் அறிவிப்பாளர் ஆசிப் மீரான் தொகுத்து அளிப்பார்.
மேலும் விவரங்களுக்கு மாலிக் 050-6965890, 055-8452178 மற்றும் ரஹ்மான் 050-7246456 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.