For Daily Alerts
Just In
துபாய் அமீரக தமிழ் மன்றத்தின் கலை நிகழ்ச்சி
துபாய்: துபாய் அமீரக தமிழ் மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சி மே மாதம் நடக்கிறது. இதில் அப்துல் ஹமீத் வழங்கும் பாட்டுக்கு பாட்டு உள்பட பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.
துபாய் அமீரக தமிழ் மன்றம் சிறப்பு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் மே மாதம் 9ம் தேதி துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஷேக் ராஷித் கலையரங்கில் மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த கலை நிகழ்ச்சியில் அப்துல் ஹமீத் வழங்கும் பாட்டுக்கு பாட்டு, சின்னத்திரை புகழ் குழுவின் 'அசத்தப் போவது யாரு', கலைஞர் டிவி புகழ் ஜோடிகளின் 'மானாட மயிலாட' நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நுழைவுச் சீட்டு பெற 050 655 02 45 / 050 6514825 எண்களை தொடர்பு கொள்ளலாம்.