For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வால்ட் டிஸ்னி அனிமேட்டர் ஓலி ஜான்ஸ்டன் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

Ollie Johnston
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல வால்ட் டிஸ்னி கார்ட்டூன் நிறுவன அனிமேட்டர் ஓலி ஜான்ஸ்டன் இறந்தார். அவருக்கு வயது 95.

வால்ட் டிஸ்னி கார்ட்டூன் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான அனிமேஷன் படங்கள், பான்டாசியா, சின்ட்ரெல்லா, ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட், லேடி அண்ட் தி டிராம்ப், ஸ்லீப்பிங் பியூட்டி, மேரி பாப்பின்ஸ் மற்றும் ஜங்கிள் புக்.

இந்த அனிமேஷன் படைப்புகளின் மூலம் தன்னுடைய திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஓலி ஜான்ஸ்டன். இந்த படங்களையும் இவரது திறமையையும் தனித்தனியாக பிரிக்க முடியாது.

ஓலி ஜான்ஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ்சின் ஜோய்னாய்டு இன்ஸ்டிடியூட்டில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு 1935ம் ஆண்டு டிஸ்னி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். மிக்கி கார்டன், புளுட்டோஸ் ஜட்ஜ்மென்ட் டை அண்ட் மிக்கிஸ் ரைவல் போன்ற அனிமேஷன் படங்களில் அறிமுகமானார்.

அனிமேஷனை தவிர்த்து 1937ல் இவரது படைப்பில் உருவான ஸ்னோ ஒய்ட்டு அண்ட் செவன் டார்ப் என்ற திரைப்படம் இன்றளவும் பேசப்படுகிறது. அனிமேஷன் படங்களுக்கு மகுடம் சூட்டிய 9 பேரில் ஓலி ஜான்ஸ்டன் ஒருவர் என்று இன்றளவும் கொண்டாடுகிறது வால்ட் டிஸ்னி நிறுவனம்.

1978ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகும் கூட எழுத்து, இலக்கியம், கலை என்று உலகத்துடனான தன்னுடைய தொடர்பையும், இருப்பையும் காட்டிக் கொண்டிருந்தார். ஜான்ஸ்டனை, சிறந்த முதல் அனிமேட்டர் விருதை கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்க அதிபர் புஷ் வழங்கி கவுரவித்தார். டிஸ்னி லெஜன்ட் விருது உள்பட பல விருதுகள் இவரை கவுரவித்தன.

வடகிழக்கு வாஷிங்டனில் வசித்து வந்த ஓலி ஜான்ஸ்டன் நேற்று மரணடைந்தார்.

'அவரது மரணம் அனிமேஷன் உலகத்துக்கு பேரிழப்பாகும். தலைச் சிறந்த கலை தலைமுறையின் அங்கமாகவே ஓலி ஜான்ஸ்டன் உள்ளார். அனிமேஷன் கலை வடிவம் பெற முக்கிய பங்காற்றியவர்களில் இவரும் முக்கியமானவர்' என்று வால்ட் டிஸ்னி நிறுவன இயக்குனர் ராய் டிஸ்னி தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X