அண்ணாதுரை, சானியாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்

சென்னையை அடுத்த மதுரவாயலில் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நாளை மாலை 4 மணிக்கு வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரியில் நடைபெற உள்ளது.
விழாவில் நிலவுக்கு சந்திரயான்-1 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய செயற்கை கோள் மையத்தை சேர்ந்த சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைக்கு அவரது சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் (டாக்டர் ஆப் சயின்ஸ்) வழங்கப்படுகிறது.
இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கணை சானியா மிர்சா பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு புகழ் குவித்து வருகிறார். அவரை பாராட்டி அவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் (டாக்டர் ஆப் லெட்டர்ஸ்) வழங்கப்படுகிறது.
இஸ்ரோ முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான கஸ்தூரிரங்கன் எம்.பி. கலந்து கொண்டு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறார். மேலும் மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்குகிறார்.
மொத்தம் 1439 மாணவ-மாணவியர் பி.டெக்., பி.எஸ்சி., பி.பி.டி உள்ளிட்ட இளங்கலை பட்டங்களையும், 615 பேர் எம்.டெக்., எம்.பி.டி. முதலிய முதுகலை பட்டங்களையும் பெறுகிறார்கள்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஆண்ட்ரூ டி.சிம்கின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார் என்றார் சண்முகம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications