போராட்டம், தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு - ரூ.7 கோடி நஷ்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழை மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்கள் காரணமாக ரூ. 7 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக பிரதான தொழிலாக உப்பு உற்பத்தி தொழில் விளங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 10 பெரிய உப்பு உற்பத்தியாளர்களும், 500க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்களும் இத்தொழிலை செய்து வருகின்றனர். இதில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பருவம் தவறி பெய்த மழையினால் உப்பு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் 3 முறை மழை வெள்ளத்தால் உப்பளங்கள் அழிந்துள்ளன. இநநிலையில் இந்தாண்டு கடந்த மார்ச் 21ம் தேதி முதல் உப்பு தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
சுமார் 20 நாள் நீடித்த இந்த போராட்டத்தினால் ரூ.3 கோடி அளவிலான உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
ஊதிய பிரச்சனை குறித்து இறுதி கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் ஆண்களுக்கு ரூ.156ம், பெண்களுக்கு ரூ.146ம் தருவதாக உப்பு உற்பத்தியாளர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 11ம் தேதிதான் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப முடிவு செய்தனர்.
ஆனால் வேலைக்கு திரும்பிய முதல் நாளே வங்க கடலில் உருவாகிய புயல் சின்னத்தால் தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இதில் கடற்கரையோர மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள் முழுவதும் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையினால் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களும் தண்ணீரில் முழ்கியது. இதனால் மேலும் ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டது. தற்போது பெய்துள்ள மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய இன்னும் 15 நாட்களுக்கு மேலாகும்.
கடந்த ஒரு மாதத்திற்குள் தொழிலாளர் வேலை நிறுத்தம், தொடர் மழை ஆகியவற்றினால் ரூ.7 கோடி வரையிலான உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications