அமீரகத் தமிழ் இலக்கியக் கலைவிழா
-முதுவை ஹிதாயத்
துபாய் வானலை வளர்தமிழ்- தமிழ்த் தேரின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'அமீரகத் தமிழ் இலக்கியக் கலைவிழா' வரும் 17ம் தேதி நடக்கிறது.
துபாய், எமிரேட்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் ஸ்கூல், அல்- சஃபா பார்க் அருகே நடக்கும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர். பர்வீன் சுல்தானா மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில் 'சுப்ரமணியபுரம்' - திரைப்பட குழுவினருக்கு(இயக்குநர் சசிகுமார், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், நடிகர் ஜெய், நடிகை சுவாதி,பாடகர் பெல்லிராஜ் ) ஆகியோருக்கு பாராட்டு விழாவும்,
குடந்தை அஸ்ரப், திருச்சி சரவணக்குமார், திண்டுக்கல் சரவணன் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும்
தமிழோடு விளையாடு- தமிழ்த் திறனுக்கான பரிசுப் போட்டி, மற்றும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் அமைப்பின் கலைச் செயலாளர்
சிம்மபாரதி தெரிவித்துள்ளார்.
மேல் விவரங்களுக்கு: சிம்மபாரதி-050 5646267, காவிரிமைந்தன்- 0502519693, ஜியாவுதீன்-0504226752, முகவை முகில்-0508650456 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
துபாயில் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி:
துபாயில் யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம் ( http://www.uaetamilsangam.com ) வரும் 23ம் தேதி மாலை கராமா சென்டரில் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியை நடத்துகிறது.
வினோத விளையாட்டு மற்றும் சிறப்பு உடை அணியும் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் யு.எ.இ. தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்யேமாக நடத்தப்படுகிறது.
சிறப்பு உடை அணியும் போட்டியில் ஆறு வயதுக்குட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், ஏழு முதல் 12 வயதுக்குட்பட்டோர் மற்றொரு பிரிவாகவும், 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிதொரு பிரிவாகவும் நடத்தப்படும்.
ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியில் பத்து ஜோடிகள் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வினோத விளையாட்டு நிகழ்ச்சியில் இரண்டு நிமிடம் தமிழில் பேசும் போட்டி நடத்தப்படும்.
நிகழ்ச்சியினைத் தொடர்ந்து இரவு உணவும் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் ரமேஷ் 050 586 5375 / சலீம் கான் 050-3184073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல்: [email protected]
துபாயைக் கலக்கி வரும் அலசல் நிகழ்ச்சி..:
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மாறுபட்ட நிகழ்ச்சியாக அலசல் நிகழ்ச்சி தமிழன் டிவியில் பதினேழு வாரங்களாக மக்களின் பேராதரவோடு ஒவ்வொரு ஞாயிறு இரவு இந்திய நேரப்படி பதினொன்று முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இலங்கை தமிழர்களின் பிரச்சனை, ராகிங் கொடுமைகளுக்கான தீர்வு,வெளிநாட்டில் வேலை இழந்தோருக்கான ஆறுதல் வழங்கி அவர்களுக்கு வழிகாட்டி வருகிறது இந்நிகழ்ச்சி.
மக்களோடு கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒவ்வொரு திங்கள் மாலை இந்திய நேரப்படி ஆறு முப்பது மணியிலிருந்து எழு முப்பது வரை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசலாம்.அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 00971 4 3530607. இந்நிகழ்ச்சியினை உருவாக்கி தொகுத்து வழங்குபவர் துபாயில் பணிபுரிந்து வரும் இளையான்குடியை சேர்ந்த முஹம்மது பைசல்.
இன்னும் பல நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு பயன்படும்படி வழங்க திட்டமிட்டுள்ளார்.
வரும் ஞாயிறு நாடாளுமன்ற தேர்தலும் மக்களின் விருப்பமும் என்ற தலைப்பு ஒளிபரப்பாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications