For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பந்த்ரா-ஒர்லி பாலம்: ஒரு வெட்டிவேலை!

By Staff
Google Oneindia Tamil News

Bandra Worli Bridge
மும்பை: மும்பையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பந்த்ரா-ஒர்லி பாலம் ஒரு வெட்டிவேலை. இதனால் மும்பையின் போக்குவரத்தை பெரியளவில் குறைத்துவிட முடியாது. இதற்கு பயன்படுத்தப்பட்ட ரூ. 1,600 கோடி வீணானது தான் மிச்சம் என தற்போது நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முதலாவது கடல் மேல் அமைந்துள்ள பிரமாண்ட பாலமான பந்த்ரா-ஒர்லி நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 5.6 கிமீ., தூரத்தை இணைக்கும் இந்த பாலத்தால் மும்பையின் நகரின் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரூ. 300 கோடி செலவில் 2004ல் முடிந்திருக்க வேண்டிய இந்த பாலம் ஐந்து ஆண்டுகள் தாமதமாக முடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செலவு 5 மடங்கிற்கு மேல் அதிகரித்து ரூ. 1,600 கோடியில் ஒரு வழியாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பாலத்தால் எதிர்பார்த்த அளவுக்கு பிரயோஜனம் இருக்காது எனவும், இந்த பாலத்தை நகரின் வளர்ச்சிக்கு என்ன செய்யக் கூடாது என்பதற்கான ஒரு உதாரணமாக வைத்து கொள்ளலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வழக்கமாக பந்த்ராவில் இருந்து ஒர்லிக்கு செல்ல 40 நிமிடங்கள் ஆகும். இந்த பாலம் மூலம் 7 நிமிடங்களில் சென்றுவிடலாம். ஆனால், சிக்கல் இந்த பாலம் முடியும் மற்றும் துவங்கும் இடங்களில் தான் இருக்கிறது. பாலத்தில் வேகமாக சென்றுவிடலாம் என்றாலும், பாலத்திலும் ஏறுவதும், அங்கிருந்து இறங்கும் போது கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

இங்கு ஏற்பட இருக்கும் போக்குவரத்து நெருக்கடியை நினைத்தால் தலை சுற்றுகிறது. பிசியான சமயத்தில் நாளை இந்த பாலத்தின் வழியாக செல்ல வேண்டும் என நினைத்தால் போதும் இன்று இரவு தூக்கம் தொலைந்துவிடும். இதில் சிக்கி கொள்ள இருப்பவர்களை நினைத்தால் இப்போதே கண்ணை கெட்டுகிறது என்கிறார் மும்பை நிபுணர் ஒருவர்.

தற்போதைய சூழ்நிலையில் மும்பைக்கு இந்த பாலம் தேவையில்லை. இதற்கு பதிலாக இரண்டு ரிங் ரோடுகளை கட்டியிருக்கலாம். அவற்றின் ஒரு பகுதியை கடற்கரை பகுதிகளுடன், மற்றவற்றை பிற பகுதிகளுடன் இணைத்திருக்கலாம்.

இது போன்று கடற்கரை பகுதிகளை இணைக்கும் ரிங் ரோடுகள் சீன தலைநகர் பீஜிங்கில் மட்டும் ஏழு உள்ளன. ஆனால் இந்தியாவில் ஒன்று கூட இல்லை.

பந்த்ரா-ஒர்லி பாலம் மிக சிறியதாக இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக கூறப்பட்டது போல் இந்த திட்டம் மும்பையின் மேற்கு கடற்கரை வரைகூட செல்லவில்லை. அப்போது வேண்டும் எனக்கூறப்பட்ட திட்டம் வடிவமைப்பு மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக தற்போது தான் முடிந்துள்ளது.

அரசியல் பிரச்சனை, ஒற்றுமையில்லாமை, நிலம் கைப்பற்றுபவதில் ஏற்பட்ட சிக்கல், ஒப்பந்தக்காரர்களால் உண்டான பிரச்சனைகள் ஆகியவற்றால் நகரத்தின் போக்குவரத்தை குறைக்க வேண்டும் என்பதில் யாரும் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள் என் மும்பை மக்கள் குறைப்பட்டு கொண்டனர்.

ஆனால், சிலர் எதுவும் கிடைக்காமல் போவதற்கு இதாவது கிடைத்ததே என சந்தோஷப்பட்டு கொள்வதாக தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X